சீனியின் பெயரில் கொக்கேன் கொள்கலன் மீட்பு | தினகரன்

சீனியின் பெயரில் கொக்கேன் கொள்கலன் மீட்பு

சுமார் ரூபா ஒரு பில்லியன் (1,000 மில்லியன்) பெறுமதியான கொக்கேன் போதைப் பொருளை, இலங்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.

இன்றையதினம் (14) பிரேசிலிலிருந்து வந்த குறித்த கொள்கலன் ஒன்றிலேயே, இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 40 வருட காலமாக சீனி இறக்குமதி செய்து வந்த வர்த்தகர் ஒருவரினாலேயே குறித்த கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலனில் சீனி இருப்பதாக, சந்தேகநபர் தெரிவித்துள்ள போதிலும், அதனை சோதனையிட்டபோது, 50 கிலோ சீனி பொதிகளுடன், 3 பயணப் பொதிகளினுள் பொதியிடப்பட்ட நிலையில், கொக்கேன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை, சுங்க தளத்தில் இருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின், சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து, குறித்த போதைப் பொருளை கைப்பற்றிப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த இடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...