திறந்த பாதையை மூடி கொஸ்கமவில் ஆர்ப்பாட்டம் | தினகரன்

திறந்த பாதையை மூடி கொஸ்கமவில் ஆர்ப்பாட்டம்

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட அனர்த்தத்தின் காரணமாக அழிவுற்ற தங்களது வீடுகளை கட்டித் தருவதற்கு முன்னர், முகாமிற்கு முன்னால் உள்ள வீதியை திறந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
 
குறித்த பாதையை திறந்தமையால் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்து, சாலாவ கிராம மக்கள் சிலர், சாலாவ முகாமிற்கு முன்னால் அமைந்துள்ள் பாதையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சுமார் 300 பேர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, குறித்த வீதியில் எரிந்த மரங்கள், பொருட்களை இட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...