கோடி அற்புதருக்கு கொச்சிக்கடையில் பெருவிழா | தினகரன்


கோடி அற்புதருக்கு கொச்சிக்கடையில் பெருவிழா

 

ஆண்டவரை வெளிப்படுத்துவதிலும் ஆண்டவருக்குச் சாட்சி பகர்வது மட்டுமல்லாது
ஆண்டவருக்காக தமது உயிரைத் தியாகம் செய்த புனிதர்களையும் நாம் கத்தோலிக்கத்
திருச்சபையில் காண முடிகின்றது.


புனிதர்களின் வாழ்க்கை எமக்கு முன்மாதிரியாகவும் விசுவாச வாழ்க்கையின்
நம்பிக்கையாகவும் விளங்குவதுடன் புனிதர்களின் வாழ்க்கை எமக்குப் பெரும்
படிப்பினையாகவும் அமைகிறது.


இந்த வகையில் புனித அந்தோனியாரை நினைவு கூரும் மாதமாக ஜூன் மாதம் உள்ளது. ஜூன் மாதம்
வந்தாலே நம் நினைவில் வருவது கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார்தான். இலங்கையில் பல
அந்தோனியார் ஆலயங்கள் இருந்த போதும் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம்
மற்றும் வஹக்கோட்டை புனித அந்தோனியார் திருத்தலம் ஆகியவையே பிரசித்திபெற்றுள்ளன.


புனித அந்தோனியார் பதுவைப் புனிதர், கோடி அற்புதர் பெருமைப்படுத்தப்படுகின்றார்.
இதற்கிணங்கவே புனித அந்தோனியாரை அண்டி வரும் மக்களின் வாழ்க்கையில் அற்புதம்
நடக்கின்றன. இதனால்தான் இன மத பேதமின்றி கொச்சிகடை புனித அந்தோனியார் திருத்தலத்தில்
செவ்வாய்க்கிழமை றேம் பெருமளவு மக்கள் கூட்டத்தை காணமுடிகிறது.


புனித அந்தோனியார் நற்செய்தி போதனையில் பிரசித்தமானவர். அவர் இவ்வாறு போதித்துக்
கொண்டிருக்கையில் மீன்கள் மேலெழுந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது.பரலோக, பூலோக பாதுகாவலரான புனித அந்தோனியார் தாம் வாழ்ந்த
காலத்தில் மட்டுமின்றி மரித்த பின்னரும் புதுமைகள் செய்து வருபவர்.


இதனைக் கண்ணுற்ற
திருச்சபை அவரை ஒரே வருடத்தில் புனிதராக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.கழுதை
மண்டியிட்டு நற்கருணையை வணங்கிய புதுமையில் இவரால் இடம்பெற்றது என வரலாறுகள்
தெரிவிக்கின்றன. அவரது போதனைகள் தலிசுவாசிகளை மனந்திருப்பியுள்ளன.


இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்த புனித அந்தோனியார் தீயவர்களையும் மன்னித்து
இறைவன்பால் திரும்புவதற்கு வழிவகுத்தவர். அன்பு வார்த்தைகளை இறைவன் ஒளியிலே
செதுக்கிய புனிதர் அவர். அதனால் அவர் இறந்து பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும்
அவரது திரு நாக்கு அழியாமல் உள்ளது. புனித அந்தோனியாரது திருப்பண்டங்கள் அண்மையில்
இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதனைப் பல இலட்சக் கணக்கான விசுவாசிகள் தரிசித்ததும் குறிப்பிடத்தக்கது.


புனித அந்தோனியார் மார்டின் – மேரி தம்பதிகளின் இங்கிலாந்தின் தலைநகர் லிஸ்பனில் 15
ஆகஸ்ட் 1195 ல் பிறந்தவர். அவரின் இயற் பெயர் பெர்னாண்டோ மார்டின் டி புல்ஹோஸ்.
போர்த்துக்கலில் பங்குத் தந்தையாக பணியாற்றியுள்ள இவர் 1231 ஜூன் 13ல் தமது 35
வயதில் இத்தாலி நாட்டிலுள்ள பாதுவா நகரில் இறைபதமடைந்துள்ளார்.


அவர் தமது
கடைக்காலங்களைக் கழித்ததும் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் பாதுவாவில் என்பதால்
அவர் பதுவைப்புனிதர் என அழைக்கப்படுகிறார். ஒன்பதாம் கிரகரி பாப்பரசரால் 30 மே 1232
ல் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.புனித அந்தோனியாரின் திருவிழா ஜூன்
13ல் அவரது இறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

எல். செல்வா...-


Add new comment

Or log in with...