புனிதராகிறார் அன்னை தெரேசா | தினகரன்


புனிதராகிறார் அன்னை தெரேசா

 

அருளாளர் அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படும் சடங்கு எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் கர்தினால்கள் அவைக் கூட்டத்தின் போது பரிசுத்த பாப்பரசர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அன்னை தெரேசாவின் புனிதர் நிலைப்படுத்தலையடுத்து மேலும் இரண்டு அருளாளர்களும் அக்டோபர் 16ம் திகதி புனிதர்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளனர்.

1910ம் ஆண்டு மாசெடோனியாவில் பிறந்து, தன் இளம் வயதிலிருந்தே இந்தியாவில் ஏழைகளிடையே பணியாற்றி, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இறைபதம் சேர்ந்த அன்னை தெரேசா அவர்கள், 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் திகதியன்று புனித திருத்தந்தை 2ம் ஜோன் போல் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், இறையடி சேர்ந்த 19ம் ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பதாக அவருக்கு புனிதர் யபம் வழங்கப்படவுள்ளது.

செப்டம்பர் 4ம் திகதி காலை 10.00 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியை பரிசுத்த பாப்பரசர் நிறைவேற்றுவார். (ஸ)


Add new comment

Or log in with...