தாய் வெளிநாட்டில்; சிறுமிகள் சித்திரவதை | தினகரன்

தாய் வெளிநாட்டில்; சிறுமிகள் சித்திரவதை

 
RSM
 
சிறுமிகள் இருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நேற்று (04) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13114","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
அச்சந்தேகநபர்களில் ஒருவரான சிறுமிகளின் சிற்றன்னை (48) கைது செய்யப்பட்டு, 4 மாத கைக்குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மற்றையவர், சிற்றன்னையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சகோதரிகளான சிறுமிகள் இருவரும், கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (01) ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13113","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி, தமது சிற்றன்னையும் அவரது கணவரும் தொடர்ந்து பல்வேறான தாக்குதல்களையும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13117","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
தேநீருக்குள் உப்புக் கலந்தும், உணவில் அதிக மிளகாய்த் தூள் கலந்தும் தந்ததோடு நடு நிசியில் நித்திரையிலிருக்கும்போது, அடித்து துன்புறுத்தியதோடு, சூடு வைத்து எழுப்பி, வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்ததாகவும் கூறியுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13116","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
8 மற்றும் 10 வயதுகளுடைய சிறுமிகள் இருவர், வீடொன்றில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக ஏறாவூர் சிறுவர் நன்நடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்த சிறுமிகள் கடந்த புதன்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13115","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இந்த சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
சிறுமிகளின் தாய் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அவர்களது தந்தை பொலன்னறுவையில் அவரது தாயுடன் வாழ்ந்து வருகின்றார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13112","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
தாய் வெளிநாடு செல்லும்போது இச் சிறுமிகளை சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
 
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ.சக்திவேல்)
 

Add new comment

Or log in with...