சீமெந்து விலை அதிகரிப்பு | தினகரன்

சீமெந்து விலை அதிகரிப்பு

 
Rizwan Segu Mohideen
 
50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலையை ரூபா 60 இனால் அதிகரிக்கும் கோரிக்கைக்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதியளித்துள்ளது.
 
ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிக்காக 5 நிறுவனங்கள் கோரியிருந்ததாக அதிகார சபையின் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.
 
இறக்குமதி வரி மற்றும் நாணய மாற்று விகித அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு குறித்த அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
குறித்த விலை அதிகரிப்பு ஜூன் 01 ஆம் திகதி முதலே அதிகரிப்பதால், சீமெந்தின் உற்பத்தி திகதியை அவதானிக்குமாறு, நுகர்வோர் அதிகார சபையினால் பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...