திருமலை கடற்கரையில் வயோதிபரின் சடலம் | தினகரன்

திருமலை கடற்கரையில் வயோதிபரின் சடலம்

 
RSM
 
இன்று காலை (02) திருகோணமலை துறைமுக கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்குத்தோட்ட பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்டகப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13090","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த நபர், திருகோணமலை, மின்சாரநிலைய வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தர்மராஜா (76) என அடையாளம் காணப்படு;ள்ளதோடு, நேற்று (01) மாலை 5.00 மணியளவில் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13091","attributes":{"alt":"","class":"media-image","height":"505","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இம் மரணம் சம்பந்தமாக துறைமுக பொலிஸார் அவ்விடத்தில் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்., சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்தச் செல்லப்பட்டள்ளது
 
(அன்புவழிபுரம் தினகரன் நிருபா் - ராஜ்குமார்)

Add new comment

Or log in with...