லலித் வீரதுங்க, நிஸ்ஸங்க, ஜயந்தவிடம் விசாரணை | தினகரன்

லலித் வீரதுங்க, நிஸ்ஸங்க, ஜயந்தவிடம் விசாரணை

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று (31) பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் (FCID) ஆஜராகியிருந்தார்.
 
அவர் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமயத்தில், முறைகேடான வகையில் வாகனங்களை கொள்வனவுக்கு நிதி ஒதுக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருந்தவேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து FCID யினரால் விசாரிக்கப்பட்டார்.
 
அத்துடன், அவன்கார்ட் கடல்சார் சேவை, தனியார் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பாதுகாப்பு வும் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் விசாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...