எவரெஸ்ட் ஏறிய ஜயந்தி, ஜொஹான் நாடு திரும்பினர் | தினகரன்


எவரெஸ்ட் ஏறிய ஜயந்தி, ஜொஹான் நாடு திரும்பினர்

 

மலை ஏறும் இருவரான ஜயந்திகுரு-உதும்பால மற்றும் ஜொஹான்பீரிஸ் ஆகியோர் உலகின் அதிஉயர் இடத்திற்கு இலங்கையை கொண்டு சென்ற ஒரு வெற்றிகரமான பயணத்தை பூர்த்தி செய்து மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

மே மாதம் 21 ஆம் திகதி, 2016 அன்று, உள்ளூர் நேரத்தின்படி, காலை 5 மணியளவில் ஜயந்தி குரு -உதும்பால உலகின் அதி உயரமான மலையான எவரெஸ்ட் மலையின் (29,029அடி) உச்சியை சென்றடைந்தார். அதே தினத்தில், ஜொஹான், மலைஉச்சியை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதிசிறந்த உயர்நிலையான 27,559 அடி உயரத்தை சென்றடைந்தார். இதன்மூலம், இதுவரை எந்த ஒரு இலங்கையரும் மலை ஏறுவதில் அடையாத ஒரு உயர்மட்டத்தை இவ்விருவரும் அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும்இதனை ஒரு கூட்டு முயற்சியூடாகவேஅடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சாதனையைப்பற்றி ஜயந்தி குறிப்பிடுகையில், உலகின்அதிஉயர் இடத்திலிருந்து இலங்கைக் ெகாடியை அசைக்கும் என்கனவு இப்போது நனவாகி விட்டது. ஒரு பெண் என்ற அடிப்படையில், முதன்முதலாக உச்சியை அடைந்த இலங்கையர் என்ற வகையில் நான் மிகவும்பெருமையும்​ கௌரவமும் அடைகிறேன்- உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், பெண்களும் யுவதிகளும் எதையும் செய்ய முடியும்”. ஜொஹான் கூறுகையில், ஒரு சாத்தியமற்ற கனவைக்காண்பது சௌகரியமானது, ஆனால் அதனை நனவாக்குவது என்பது ஒரு சாதனையாகும். கடவுள் நம்பிக்கை மற்றும் விசுவாசமே இதனை சாத்தியமாக்கியது.எனது ஒட்டுமொத்த அனுபவத்தின் சாராம்சம்இதுவே.

இவ்விருவரும், இந்த இலக்கை நோக்கிய முயற்சிகளை பலவருடங்களாக மேற்கொண்டனர்.இவர்கள் ஒன்றிணைந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளபலமலை உச்சிகளைத் தொட்டனர். மேலும், இந்தமலை உச்சியைநோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் நாள்வரை மிகவும்கடுமையான பயிற்சியி ல் ஈடுபட்டதுடன் இதனை சாத்தியமாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் முழுமையாக ஈடுபட்டனர். இவர்கள், மார்ச் மாதம் கடைசிப்பகுதியில் நேபாளம்சென்று, சுமார் 2 மாதங்கள் வரை மலை ஏறுவதிலும், அந்த உயரமான இடத்தில் காணப்படும் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு அவர்களை பழக்கப்படுத்திக்கொள்வதிலும் ஈடுபட்டனர். இவ்வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள, இவர்களது பங்காளியாக 'மலை ஏறுவதற்கான சர்வதேச வழிகாட்டிகள் என்றநிறுவனத்தை தெரிவுசெய்தனர்.

இந்தப்பயணம் முழுவதுமாக அளவு கடந்த ஆதரவு மற்றும் வாழ்த்துத் தெரிவித்த அவர்களது குடும்பம், நண்பர்கள் மற்றும் சக இலங்கையர் அனைவருக்கும் ஜெயந்தி மற்றும் ஜொஹான்அவர்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

எவரெஸ்ட் பயணக்குழுவினர் பின்வரும் ஆதரவாளர்களிற்கு அவர்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்: உச்சியை அடைவதற்கான ஆதரவு வழங்கியபெயர் வேஹோல்டிங்க்ஸ், விமானப் பயணபங்காளர்- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தளமுகாம்களிற்கான ஆதரவாளர்களான செலான்வங்கி, மொபிடெல் தொலைத்தொடர்பு மற்றும் ஜனசக்திகாப்புறுதி, மேலும் துணைக் கருவிகள்வழங்கிய SEALs, Petzl மற்றும் விக்டோரினாக்ஸ்.


Add new comment

Or log in with...