அற்புதத்தின் திருநாள் 'விண்மீன்களின் மாதா' | தினகரன்


அற்புதத்தின் திருநாள் 'விண்மீன்களின் மாதா'

 

"விண் மீன்களின் மாதா” என்ற திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

1536ம் ஆண்டில் மரியாள் செய்த அற்புதம் ஒன்றினால் இந்த பெயர் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

1536ம் ஆண்டில் வைகாசி மாதம் 31 ஆம் திகதியன்று வாய் பேச இயலாத, காது கேட்காத ஒரு ஏழை இடையரான அன்டோனியோ டி அன்டோனி என்பவருக்கு புனித மரியாள் தரிசனம் அளித்தார். சான் விஜிலோவின் ஒரு நிலச்சுவந்தாரின் மந்தையினை இவர் மேய்ந்து வந்தார். அவ்வாறு மேய்க்கும்போது ஜெபமாலையை இவர் பக்தியோடு ஜெபித்து வருவதுண்டு. அத்தகைய ஒரு நேரத்தில் குழந்தையை தனது கைகளில் ஏந்தியவாறு அன்னை வழங்கிய தரிசனத்தை அவர் பெற்றார்.

காட்சி வழங்கிய இடத்தில் ஒரு ஆலயத்தை தனது பெயரால் கட்டியெழுப்புமாறு சுற்றியுள்ள பகுதியிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களிடம் தெரிவித்து அதில் ஈடுபடுமாறு அன்னை கூறினார்.

அற்புதங்களும், அருஞ்செயல்களும் நடைபெறவேண்டுமென்று அந்த இடையர் வைத்த வேண்டுகோளை தாம் நிச்சயம் நிறைவேற்றுவதாக அன்னை மரியாள் அவருக்கு வாக்குறுதி வழங்கினார். திருத்தந்தை மூன்றாம் சின்னப்பர் அன்னை தரிசனம் வழங்கிய இடத்தில் ஆலயம் ஒன்று கட்டப்பட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் 1537ம் ஆண்டு தொடங்கி 1539ம் ஆண்டில் நிறைவடைந்தன. (ஸ) 


Add new comment

Or log in with...