லசந்தவின் ஆவணங்களை CID க்கு வழங்க உத்தரவு

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை குற்றப் புலனாய்வு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற வேளையிலேயே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
 
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தினால், இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த உத்தரவில், லசந்தவின் கொலை தொடர்பில், இது வரை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில், நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்தே கல்கிஸ்ஸை நீதவான் எம். சஹாப்தீன் குறித்த உத்தரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கு, கடந்த ஜனவரி 08 ஆம் திகதி தனது காரில் பயணித்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...