பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்து 1 1/2 வயது குழந்தை பலி | தினகரன்

பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்து 1 1/2 வயது குழந்தை பலி

 
RSM
 
கட்டப்படாத கிணறு ஒன்றினுள், தவறி விழுந்த குழந்தை ஒன்று, உயிரிழந்துள்ளது.
 
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தோப்பூர் தங்கபுரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், உயிரிழந்த குழந்தை கஜேந்திரன் தர்சன் (1 1/2 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் நேற்று (29) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12988","attributes":{"alt":"","class":"media-image","height":"474","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
உயிரிழந்த குழந்தையின் சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில், தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ. நூறுல்லா விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸாரும் மேற் கொண்டு வருகின்றனர்.
 
(தோப்பூர் தினகரன் நிருபர் - எம்.என்.எம்.புஹாரி)
 

Add new comment

Or log in with...