எண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம | தினகரன்

எண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்திற்கு சொந்தமான எந்தவொரு எண்ணெய்க் குழாய்களிலிருந்தும் எவ்வகையிலும் எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
 
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதன்போது விளக்கமளித்த அமைச்சர், குடிநீரில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக அறிந்தோம். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதோடு, நாம் இது குறித்து பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே, மிக பொறுப்புடன் இதனைத் தெரிவிக்கிறோம் என்றார்.
 
எனவே, இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டிக் கொள்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
 
இதேவேளை, குறித்த வெள்ளப் பெருக்கின்போது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பல்வேறு வழிகளிலும் பாரிய உதவிகளை மேற்கொண்டிருந்தனர். அவை ஊடகங்களில் வெளிவராத போதிலும், தற்போதும் அவர்கள் அக்கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

Add new comment

Or log in with...