லலித் வீரதுங்க, ஜெக்சன் அந்தனியிடம் விசாரணை | தினகரன்

லலித் வீரதுங்க, ஜெக்சன் அந்தனியிடம் விசாரணை

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
முன்னாள் ஜனாதிபதி செயலாளரான லலித் வீரதுங்க இன்று (24) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார்.
 
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சத்திரசிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபா 20 கோடி வழங்கியமை தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளரும் நடிகருமான ஜெக்சன் அந்தனியிடம் வாக்குமூலமொன்றை பெறும் பொருட்டு, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
 
இன்றைய தினம் (24) குறித்த ஆணைக்குழுவில் ஆஜரான ஜெக்சன் அந்தனியிடம், ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட பணம் தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add new comment

Or log in with...