நீங்களும் உதவலாம்; இதுவரை ரூபா 3 கோடி 34 இலட்சம் | தினகரன்

நீங்களும் உதவலாம்; இதுவரை ரூபா 3 கோடி 34 இலட்சம்

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் திரட்டப்படும் அனர்த்த நிவாரண உதவியாக இதுவரை ரூபா 33.4 பில்லியன் சேகரிக்கப்பட்டுள்ளது.
 
டயலொக் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த பணியில், லேக் ஹவுஸ் நிறுவனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி ஆகியன ஊடக அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12814","attributes":{"alt":"","class":"media-image","height":"556","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
அந்த வகையில், உங்கள் கையடக்க தொலைபேசியிலிருந்து DON என டைப் செய்து, 7700 இற்கு அனுப்புவதன் மூலம் ரூபா 50 ஐ நிவாரண நிதியாக வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அது மாத்திரமன்றி நீங்கள் வழங்கும் ரூபா 50 இனை ஈடு செய்யும் வகையில், டயலொக் நிறுவனத்தால் ரூபா 100 வழங்கப்பட்டு, அத்தொகை ரூபா 150 ஆக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை உங்கள் டயலொக் கையடக்க தொலைபேசியில் காணப்படும் ஸ்டார் பொயின்ஸ்களையும் இவ்வாறு நிவாரண உதவித் தொகையாக வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு #141# இனை அழையுங்கள்.
 
நேற்றைய தினம் (22) வரை, நீங்கள் வழங்கிய நிவாரணத் தொகை ரூபா 10.3 மில்லியன்களாக உயர்ந்வடைந்துள்ளதோடு, டயலொக் நிறுவனத்தால் ரூபா 23.1 பில்லியன் வழங்கப்பட்டு மொத்தமான ரூபா 33.4 பில்லியன்கள் (ரூபா 3 கோடி 34 இலட்சம்) சேகரிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியுதவி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...