6 ஆவது முறை முதல்வரானார் ஜெயா

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. கட்சியின் செயலாளர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளார்.
 
இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 12 ஆவது மாநிலங்கள் அவைக்கான பதவியேற்பு வைபவத்தில், 28 அமைச்சர்கள் சகிதம் ஜெயலலிதா பதவியேற்றார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12810","attributes":{"alt":"","class":"media-image","height":"380","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த பதவியேற்பு வைபவம், தமிழ்நாட்டின் ஆளுநர் கே. ரோசையா முன்னிலையில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
 
அமைச்சரவையில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பெண்கள் உள்ளடங்குவதோடு, 2 மருத்துவர்கள், 3 வழக்கறிஞர்கள், 6 (பட்ட பின்படிப்பு) பட்டதாரிகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இதேவேளை 6 ஆவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா, தொடர்ச்சியாக இரு முறை முதல்வராக பதவியேற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
 
ஜெயலலிதா முதல்வராக
1. 1991 ஜூன் - 1996 மே
2. 2001  மே - 2001 செப்டெம்பர்
(குற்றவாளியாக இனங் காணப்பட்ட ஒருவரால் இரு வருடத்திற்குள் முதல்வராக முடியாது எனத் தெரிவித்து நீதிமன்றத்தால் பதவி விலக்கப்பட்டார்)
3. 2002 மார்ச் - 2006 மே
(வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றார்)
4. 2011 மே - 2014 செப்டெம்பர்
(சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பதவி விலக்கப்பட்டார்)
5. 2015 மே - 2016 மே
(வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பதவியேற்றார்)
 
அந்த வகையில் இது வரை அ.இ.அ.தி.மு.க 4 முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு, அக்காலப் பகுதியில் 6 தடவைகள், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12811","attributes":{"alt":"","class":"media-image","height":"414","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதேவேளை, அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. 5 முறை, தமிழ்நாடு தேர்தலை வெற்றி கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
 
235 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் மாநிலங்கள் அவையில், 234 பேர் தேர்தலின் மூலமும், ஆங்கிலேய இந்தியர் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதோடு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு 118 பெரும்பான்மை ஆசனங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த மே 16 ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலில் 134 ஆசனங்களை, ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
 
கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. 89 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.
 
கட்சி              ஆசனங்கள்
அ.இ.அ.தி.மு.க. - 134
தி.மு.க. - 89
இந்திய தேசிய காங்கிரஸ் - 08
இந்திய ஐக்கிய முஸ்லிம் லீக் - 01
 
ஆசனங்களைப் பெற்றன.
 
ஆயினும் அறவாகுறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அத்தொகுதிகளில் தேர்தல் இடைநிறுத்தப்பட்டதோடு, எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...