வெள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பேஸ்புக் | தினகரன்

வெள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பேஸ்புக்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் தொடர்பான அனர்த்தம் தொடர்பில், நண்பர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என அறியத் தரும் வகையில் பேஸ்புக் நிறுவனத்தால் முறைமை ஒன்று அனுப்பப்பட்டு வருகின்றது.
 
"Facebook Safety Check" எனப்படும், சுய பாதுகாப்பு நிலை குறித்து நண்பர்கள், உறவினர்கள் அறியும் வகையில் அமைந்துள்ள இந்த முறைமையில், வெள்ள அனர்த்தம் காணப்படும் பகுதியில் உள்ள நீங்கள் "I'm Safe" (நான் பாதுகாப்பாக உள்ளேன்) எனத் தெரிவிப்பதன் மூலம் உங்கள் உறவினர், நண்பர்களுக்கு உங்கள் பாதுகாப்பு நிலை குறித்து அறியத் தர முடியும்.
 
அல்லது "I'm not in the area" (நான் அப்பகுதியில் இல்லை) எனத் தெரிவிக்க முடியும்.
 
இதனை அடுத்து, உங்கள் பேஸ்புக் கணக்கில் இணைந்துள்ள உறவினர், நண்பர்களுக்கு குறித்த தகவல் (Notification ஆக) சென்றடையும்.
 
அதேபோன்று, குறித்த தளத்திற்கு செல்வதன் மூலம் (www.facebook.com/safetycheck/srilanka-flooding-may18-2016) உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குறித்த பாதுகாப்புத் தகவலை உறுதி செய்துள்ளார்களா என ஆராயவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...