ஊடகங்களுக்கு பொய் கூறிய ஓமான் விமான சேவை | தினகரன்

ஊடகங்களுக்கு பொய் கூறிய ஓமான் விமான சேவை

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இன்று (18) காலை 11 மணியளவில், ஓமான் விமானசேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய்யானது என ஓமான் விமானசேவை அறிவித்துள்ளது.
 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"12730","attributes":{"alt":"","class":"media-image","height":"640","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 673px; height: 640px; float: left;","typeof":"foaf:Image","width":"673"}}]]

அவசர நிலைமைகளின்போது, அனைத்து தரப்பினரிடையேயும் எந்த அளவில் தகவல் சென்றடைகின்றது என அறிவதற்காக தொலைபேசி மூலம் குறித்த அறிவிப்பை விடுத்ததாகத் விமான சேவை தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, விமான சேவைகளில் இவ்வாறான விடயம் நடைபெறுவது இயல்பு எனவும், தகவல் தொடர்பாடல் நிலையங்கள் சிறப்பாக செயற்படுகின்றதா என அறிவதற்காக மேற்கொள்ளப்படுகின்றது எனவும், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
இந்த பயிற்சி நடவடிக்கை, ஒன்றிணைந்த அவசரகால திட்டமிடல் நடவடிக்கை என்பதோடு, இதன் மூலம் சரியான தகவல்கள், உடனுக்குடன் உரிய தரப்பினருக்கு கிடைக்கின்றதா என அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, அவ்வாறான எந்தவொரு அவசர நிலையும் ஏற்படவில்லை எனவும், இது ஒரு பயிற்சி நடைமுறை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add new comment

Or log in with...