மட்டு. மாவட்டத்தில் 26,400 ஏக்கர் வயல் வெள்ளத்தில் | தினகரன்


மட்டு. மாவட்டத்தில் 26,400 ஏக்கர் வயல் வெள்ளத்தில்

RSM
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து சுமார் 26,400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12710","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இடைப்போகத்திற்கென நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் கூறினார்.
 
மண்டூர், வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகளவான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12711","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
மாவட்டத்தின் அனைத்து வயல் நிலங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரி.ஐ. ஜௌபர்கான்)

Add new comment

Or log in with...