முக்கிய தகவல்கள் கசியவில்லை | தினகரன்

முக்கிய தகவல்கள் கசியவில்லை

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
கடந்த மே 12 ஆம் திகதி கொமர்ஷல் வங்கியின் கணனித் வலையமைப்பின் மீது ஹெக்கர்களால் (Hackers) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.
 
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஹெக்கர் தாக்குதல், துர்க்கியை மையமாக வைத்து இயங்கும், பொஸ்கர்ட்லா (Bozkurtla) எனும் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, கடந்த மே 10 ஆம் திகதி, ஐந்து தெற்காசிய வங்கிகளிலும், ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கி ஒன்றை கடந்த மே 07 ஆம் திகதியன்றும் ஹெக் செய்து, தகவல்களை திருட முயற்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன்னரும், இவ்வாறான பல்வேறு ஹெக்கர் தாக்குதல்களை  அக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும், தாம் உடனடியாக செயற்பட்டதாக தெரிவித்த கொமர்ஷல் வங்கி, இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் எவ்வித தகவல்களோ, பெறுமதிமிக்க கடவுச்சொற்களோ (Passwords) திருடப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது தவிர, நேபாளத்தின் சனிமா வங்கி, பங்களாதேஷை மையமாகக் கொண்ட டச் பங்களா வங்கி, கத்தார் தேசிய வங்கி போன்றவற்றையும் ஹெக்கர்கள் ஊடுருவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...