ரோசியின் விருப்பு வாக்கு நிராகரிப்பு

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதான, கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகளை மீண்டும் கணக்கெடுக்குமாறு கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
 
குறித்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
 
வாக்கெண்ணும் மையங்களில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இருந்ததோடு, குறித்த விருப்பு வாக்கின் இறுதி எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டதாக கையெழுத்திடப்பட்டுள்ளதால் குறித்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
 
கடந்த பொதுத் தேர்தலில், ரோசி சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...