போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த 07 பேர் கைது | தினகரன்

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த 07 பேர் கைது

 
போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த மற்றும் அதற்கு உதவிய சந்தேகநபர்கள் 07 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
பாணந்துறை மத்திய குற்றத் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மருதானை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தமை மற்றும் அதற்கு உதவியமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்ட குறித்த 07 சந்தேகநபர்களும், 43, 50, 58, 37, 38, 36 ஆகிய வயதுப் பிரிவைக் கொண்டவர்கள் என்பதோடு, குறித்த நபர்கள், மட்டக்குளிய, நாராஹேன்பிட்ட, மல்வானை, பாணந்துறை, கிருலப்பனை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
பாணந்துறை வலானை, மத்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், மீரிஹானை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து பின்வரும் பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
 
1. போலியாக தயாரிக்கப்பட்ட 06 சாரதி அனுமதிப்பத்திரம்
2. அச்சிட தயார் நிலையில் வைக்கப்பட்ட போலி அனுமதிப்பத்திரம்
3. கணனி
4. லெமினெட்டிங் இயந்திரம்
5. ஸ்கேனிங் இயந்திரம்
6. பிரின்டர்
 
குறித்த சந்தேகநபர்கள், இன்றைய தினம் (25) மாளிகாகந்தை மற்றும் அலுக்கடை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
 
 

There is 1 Comment

நாட்டில் ஏனையவர்களுக்கு சரியான வருமானம் அல்லது தொழிலொன்று இருந்தால் யாவும் இத்தகைய தவறான வழியில் போகாது. யாவும் ஆர்வத்துடன் தவறுதள் சையாது. வாழ்வதாரத்தை முடியாமல் நெறுக்கடிக்குள்ளாப்பட்ட கடைசித் தருணத்தில் இது போன்ற வேலைகளுக்கு ஆசைக்காட்டுவார்.

Pages

Add new comment

Or log in with...