இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது: த.தே.கூ. கோடீஸ்வரன் | தினகரன்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது: த.தே.கூ. கோடீஸ்வரன்

நான் ஜ.நா. மனிதஉரிமைப் பேரவைக்கான  எந்த பொதுவான மகஜரிலும் கையெழுத்திடவில்லை. எனது தனிப்பட்ட விண்ணப்பத்தை ஜ.நாவுக்கு அனுப்பியுள்ளேன். 
 
ஜ.நாவுக்கான பொது மகஜரில் கையெழுத்திட்ட விவகாரம் தொடர்பாக  அம்பாறை மாவட்ட த.தே.கூ. எம்.பி. கோடீஸ்வரனிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
எது எப்படியிருப்பினும் காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து என்றும் அவர் கூறினார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
 
போர்க் குற்ற விசாரணையின்போது சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இலங்கைக்கு தேவை என்ற விடயத்தையும் ஜ.நா.வின் மனித உரிமைப் பேரவையின்  30/1 சரத்தின் படி சகல செயற்பாடுகளையும் பரிபூரணமாக இலங்கையில் மேற்கொள்ளவேண்டும் எனும் எனது தனிப்பட்ட கருத்தை கடிதமாக அனுப்பிவைத்துள்ளேன்.
 
சில வேளை இலங்கைக்கு காலநீடிப்பு வழங்கினால் அது 3 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
 
  • ஜ.நா.மனிதஉரிமைப்பேரவையின் 30.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை கிரமமாக பரிபூரணமாக செய்யவேண்டும். 
  • அதனை கண்காணித்து அறிக்கைசெய்ய இலங்கையில் ஒரு அலுவலகம் ஏற்படுத்தப்படவேண்டும். 
  • முறையாக அமுலாகவிட்டால் ஜ.நா.தனக்குரிய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறப்பு பொறிமுறையினூடாக மக்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.
 
என சுட்டிக் காடினார்.
 
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு கருத்தையம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ஒரு கருத்தையும் வௌியிட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கே. கோடீஸ்வரன் மற்றுமொரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
(காரைதீவு குறூப் நிருபர் சகா)
 
There are 2 Comments

எமதினத்தின், நீண்ட தொடர்ச்சியான எந்தவொரு வேண்டுகோளையும் பரப்புரைகளையும் மீறி, இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவதென்ற முடிவு, "சக்தி வாய்ந்தவர்களால்" ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதொன்று. விரலுக்கேற்ற வீக்கம் கொண்ட நம்மால், ஒரு முதிர்ந்த ராஜதந்திர நகர்வுகளினால் மட்டுமே இதனூடகவும் ஒருசில பயன்களைப் பறித்தெடுக்க முடியும். நாம் ஆக்கிரசத்தோடு போராடிய ஒரு இனம். மாறிவருகின்ற சூழல்களுக்கேற்ப நாம் மாற்றமடைவது பச்சசோந்த்திதனமல்ல. ஆனாலும், கீரைக்கடைக்கும் ஒரு எதிர்கடை இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...