கேப்பாப்புலவு போராட்டம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருடன் நேற்று சந்திப்பு | தினகரன்

கேப்பாப்புலவு போராட்டம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருடன் நேற்று சந்திப்பு

புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் இக் கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (9) காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் கேப்பாபிலவு மக்கள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போது பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் புதுக்குடியிருப்பு மக்களின் 49 சொந்த வீடுகள் உள்ளடங்கியிருப்பது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் தனியாருடைய காணிகளில் இராணுவம் இருப்பது தொடர்பில் அதற்கான சான்றுகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

அருகில் உள்ள அரச காணிகளுக்கு இராணுவத்தை நகர்த்தி அம்மக்களின் காணிகளை விடுவிக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சரையும், இராணுவ அதிகாரிகளையும் , அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை உடனடியாக ஆராய்ந்தார்.

இதன் அடிப்படையில் இராணுவ வசமுள்ள குறித்த 49 வீடுகளையும், காணிகளையும் உரிமையாளர்களிடம் உடன் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார்.

மக்கள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது சொந்த வீடுகள் விடுவிக்கப்படாததால் தாம் நிரந்தர வாழ்விடமின்றி பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருவதாகவும் 7 வருடங்களாக தாம் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லையெனவும் குறிப்பிட்டனர்.

இதற்கு பிரதமர் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து உரிய காணிகளை மக்களிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

There are 4 Comments

PM always quick to promise many things; but he has no mechanism to follow up and implement those promises. Even his speeches in the Parliament also have not been considered seriously by anyone as he provides only slanders treating all other people as idiots. PM must be very careful if he wishes to remain in the politics. last time because of the generosity of the HE he became the PM; but he should not depend on this kind of free gifts forever. He must improve accountability and leadership if he expects the people to believe his grandiose promises such as 1.0 million jobs and pocket full of money for all. Empty talks should be totally avoided by PM.

What Mr. Bakasingham says is very correct. In the past I also was thought that the PM as a political pioneer with vast experiences who could run the country free and fare way up to vast development, but withing this short time of his office he has proved that every hopes will never be fulfilled and he has entangled in mesh because of his unresponsible takes and deeds. This is very sad situation in the view of people of this country.

Pages

Add new comment

Or log in with...