பல்கேரியாவில் அஜீத் | தினகரன்

பல்கேரியாவில் அஜீத்

அஜீத் நடிக்கும் அவரது 57-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்தது. படம் முழுவதும் வெளிநாடுகளில் தான் தயாராகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இதை தயாரிக்கிறது. இந்த தகவலை பட தயாரிப்பாளர் ஜி.டி.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், நகைச்சுவை வேடத்தில் கருணாகரன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அஜீத் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பல்கேரியாவல் தொடங்குகிறது. தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் 2017-பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

2017 தமிழ்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.அடுத்த மாத தொடக்கத்தில் படக்குழுவினர் வெளிநாடு செல்வார்கள் என்று தெரிகிறது 


There is 1 Comment

Very super

Pages

Add new comment

Or log in with...