அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சைவபரிபாலன சபையால் நடத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பாலபண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரிகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அனுட்டித்து வரும் 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.
சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் கீழ்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது இளஞ்சைவப் புலவர் தேர்வு அல்லது சித்தாந்த பண்டிதர் தேர்வு (சைவபரிபாலனசபை) அல்லது பண்டிதர் தேர்வு (ஆரிய திராவிடபாசா விருத்திச் சங்கம்) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 100 ரூபா செலுத்தி விதிகள், பாடத்திட்டத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பெற்று பரீட்சைக் கட்டணமாக 500 ரூபாவினை இலங்கை வங்கியில் 'அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், கணக்கு இல. 1133272 இற்கு வைப்பிலிட்டு பற்றுச்சீட்டுன் எதிர்வரும் 20.01.2022 இற்கு முன்பாக 'சைவப்புலவர் ஏ.அனுசாந்தன், தேர்வுச் செயலாளர், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், இல. 153 கே.கே.எஸ். வீதி கொக்குவில்' என்னும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
வங்கிப் பற்றுச்சீட்டு விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பிந்திய விண்ணப்பங்கள் மேலதிக அறவீட்டுக் கட்டணம் 100 ரூபாவுடன் 31.01.2022 வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப் பிந்திய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இப்பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களை 0766345136 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்று அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
சைவப்புலவர்
செ.த.குமரன்
(செயலாளர்) அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்,
கே.கே.எஸ்.வீதி, கொக்குவில்
(0779773538)
There is 1 Comment
How to aplayi saiva pulavar exam
Add new comment