மலையகத்தில் 329 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்

மலையகப் பிரதேசங்களிலுள்ள 329 பட்டதாரிகள்  நிரந்தர சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு இரு கட்டங்களில் பயிற்சி பட்டதாரி அபிவிருத்தி  அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு,  பயிற்சியின் பின்னர் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.   329 பட்டதாரிகள்  நிரந்தர சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதம விருந்தினராக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கலந்து கொண்டார். அவர் அங்கு உரையாற்றும் போது தெரிவித்ததாவது-,அறிமுகத்தின் அடிப்படையில் அரச சேவைகளை வழங்கி, பொது சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பேர் மட்டுமே நியமன விழாவிற்கு அழைக்கப்பட்டுருந்தனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

 


There is 1 Comment

மலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.

Add new comment

Or log in with...