சாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. சாணக்கியனின் முதலமைச்சர் கனவு பலிக்காதென கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று (4)மாவட்ட அலுவலகத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்.அது நடைபெறாது.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.தமிழர்களின் பூர்வீக பிரதேசம், பூர்வீக சொத்துக்களை,தமிழர்களின் அடிப்படை உரிமைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களுக்கு நிரந்தர இருப்பாக இருக்கும்.

தமிழ்தேசிய தலைமைகள் கிழக்கு தமிழர்களின் தலைமைத்துவ இருப்பை பாதுகாக்காத காரணத்திலும், கிழக்கு பிரதேசத்தை சகோதர இனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததனாலும் கடந்த கிழக்கு மாகாண ஆட்சி தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி இருந்தது.

இதனை ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாத்தது என தெரிவித்தார்.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும்,அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக் கொண்டது.

இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எமது ஆளும் கட்சியில் இரண்டு பேரை பாராளுமன்றம் அனுப்பியும்,அமைச்சராக்கியும் தமிழர்களின் கைகளுக்கு இழந்த அபிவிருத்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

 


There is 1 Comment

RIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி கனவு காண வேண்டாம். கிழக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களை நம்பவில்லை, நீங்கள் எங்களுக்கு செய்த குற்றங்களையும், 30 ஆண்டுகளாக எல்.ரீ.ரீ.ஈ யின் "டிஃபாக்டோ" ஆட்சியின் போது நீங்கள் எங்களை எவ்வாறு அடக்கினீர்கள் என்பதையும் நாங்கள் மறக்க மாட்டோம். வடக்கு மற்றும் கிழக்கை இணைப்பதை கிழக்கின் முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்த்தார்கள், கிழக்கில் உள்ள தமிழர்களுடன் எந்தவொரு அரசியல் ஒற்றுமையையும் முஸ்லிம்கள் தொடர்ந்து எதிர்ப்பார்கள், இன்ஷா அல்லாஹ். தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கிலே அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன்.என்று நினைப்பது தவறு. நீங்கள் கூறிய இந்த அறிக்கைக்கான பதில், போனம்பலத்தின் 50-50 முன்மொழிவு குறித்து மறைந்த ஜெயா 1944 இல் சட்டமன்றத்தில் கூறியதைப் போலவே இருக்கும். இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடுவதற்காக சிங்களவர்களுடன் சேருவதில் அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான்: “முஸ்லிம்களைப் பொருத்தவரை இது நடைமுறையாக இருந்து வருகிறது, உண்மையில், இது முஸ்லிம்களின் கடமையாகக் கருதப்படுகிறது, எங்கிருந்தாலும் அவர்கள் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று தங்களைக் கண்டறிந்தாலும் எந்தவொரு இயக்கத்திலும் நாட்டின் மக்களுக்கு முழு அளவிலான சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். முழு சுதந்திரத்துக்கான போராட்டம் என்றால், முஸ்லிம் சமூகம் பொருத்தவரை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் செயல்பட தயாராக இருக்கும், ஏனென்றால் சுதந்திரத்தின் எழுத்துப்பிழை எந்த வேறுபாடுகளையும் அழிக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள் ”. Noor Nizam - Convener "The Muslim Voice".

Add new comment

Or log in with...