பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை | தினகரன்


பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை

பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை-Palitha Thewarapperuma and 4 Others Released on Bail

கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட கண்காணி ஒருவரின் சடலத்தை அத்துமீறி தோட்ட மயானத்தில் அடக்கம் செய்தமைக்காக பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐவர் கடந்த வாரம் (10) கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த ஐவருக்கும் இன்று (16) வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குறித்த கைது தொடர்பில் அவரை விடுவிக்குமாறு தெரிவித்த, பல்வேறு பகுதிகளிலும் மலையக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.

சடலத்தை அடக்கம் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர். அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார். இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டிருந்தார்.


There are 2 Comments

HE IS A HERO. GOD IN HUMAN VERSON. LEAVE HIM ALONE. OTHER POLITICIANS ARE BLADDY CROOKS.

HE IS MAN WITH BIG HEART. OTHER POLITICIAN ARE CROOKS.

Add new comment

Or log in with...