பால்மா சர்ச்சை; ஐ.நா. சபையில் இன்று மகஜர் கையளிப்பு | தினகரன்


பால்மா சர்ச்சை; ஐ.நா. சபையில் இன்று மகஜர் கையளிப்பு

பால்மா சர்ச்சை தொடர்பில் இன்று ஐ.நா சபையின் இலங்கைக் கிளைக்கு மகஜர்  கையளிக்க உள்ளதாக, மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான மன்றம் அறிவித்துள்ளது.  

பால்மாக்களின் தரம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அமைச்சர்கள் பொறுப்பின்றி கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.சுமார் இரண்டு கோடி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசிய உணவுக் கொள்கையொன்று இல்லாது உள்ளது.   

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையை அறிவூட்டுவதற்காக மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, ஏனைய சிவில் அமைப்புகளுடன் இணைந்து இன்று (25) மகஜரொன்றை கையளிக்க இருப்பதாக மேற்படி மன்றம் அறிவித்துள்ளது.  

பால்மாக்களின் தரத்தை சுயாதீனமாகவும் துல்லியமாகவும் அறிவதற்காக உள் நாட்டிலுள்ள பால்மா மாதிரிகள் கொழும்பு கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிகளை வழங்குமாறு குறித்த நிறுவனத்தை கோரியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் நச்சுப் பொருட்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப் பட்டது.இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி அமைப்பு ஐ.நாவிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளது.(பா)


There is 1 Comment

"WITHOUT PREJUDICE" The Muslim community in Sri Lanka has to be greatfull to the Hon. Minister for revealing this information in the “floor of the parliament”. It is a “HYPOCRATIC AND SHAMEFULL” statement that the ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) operated sister NGO – The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body has “FALSELY” made statements certfying the Milk powder alleged to contain Lactose and Pig Oil to be “HALAL”. This is the greatest “DECEPTION and HOODWINKING to “DUPE” the Muslim community the All Ceylon Jamiyathul Ulema had done to our community. A PRESIDENTIAL COMMISSION SHOULD PROBE THE CORRUPTION OF THE ACJU, THE ILL EARNINGS THEY ARE MAKING BY PROVIDING FALSE HALAL CERTIFICATIONS AND THE ACTIVITIES OF THE The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU. www.thinakaran.lk and the UNHRC should use the RTI act to obtain the necessary informations about the activities of the ACJU and the Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU. “THE MUSLIM VOICE” “DEMANDS” THE TRUTH FROM THE MILK IMPORTERS AND THE MANUFACTURERS/EXPORTERS ABROAD” TO REVEAL THE TRUTH TO THE MUSLIM COMMUNITY. “THE MUSLIM VOICE” also requests/appeals all Muslims in Sri Lanka to “BOYCOTT” the purchasing of this type of Powdwred Milk that has leaked into the market, as stated by the Hon. Minister Budikka Pathirana – Deputy Minister of Trade and Commerce. “THE MUSLIM VOICE” wishes to state that it fully endorses and support Hon. Budikka Pathirana’s statement in parliament. Noor Nizam. Convener - "The Muslim Voice".

Add new comment

Or log in with...