க.பொ.த சா/த பெறுபேறுகள் அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடம் | தினகரன்


க.பொ.த சா/த பெறுபேறுகள் அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடம்

 தமிழ்மொழியில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மிருனி சுரேஷ்குமார் தமிழ்மொழி மூலம் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

முதலாவது இடத்தை கம்பஹா ரத்னாவலி பாலிகா மகாவித்தியாலயம், கண்டி உயர்தர பெண்கள் கல்லூரி, கண்டி மஹாமாயா கல்லூரி, மாத்தறை சுஜாதா வித்தியாலயம், இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கம்பாஹா ரத்னாவலி பாலிகா மகாவித்தியாலயத்தைச் ஹேர்ந்த கசுனி ஹன்சனா செனவிரட்ன, ரவீசா சுபசிங்க ஆகிய மாணவியர்களும், கண்டி உயர்தர பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த பிரபவி ரணசிங்க என்ற மாணவியும், கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த திவ்யாஞ்சனா விமலவீர என்ற மாணவியும், மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரந்தி லக்பிரியா என்ற மாணவியும், இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கவீஷ பிரதிபாத் என்ற மாணவனும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

ஆறுபேர் முதலாவது இடத்தைப் பெற்றிருப்பதால் ஏழாவது இடத்தை ஒன்பது மாணவர்கள் பெற்றுள்ளனர். தமிழ்மொழி மூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மிருதி சுரேஷ்குமார் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நிபுனி இந்தீவரீ ஹேரத், கொழும்பு சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அனீஷா கீதாஞ்சலி, கொழும்பு சமுத்ராதேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரிஸினி தினாரா குமாரசிங்க, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மாணவன் கவின் சந்தீப் சிறிவர்தன, கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த திமன்த சமுர்த்தி விக்ரமசிங்க, ஹோமாகம மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலத்தைச் சேர்ந்த செனுரி தில்ரூ மல்லிகாரச்சி, கண்டி ஹில்வுட் கல்லூரியை சேர்ந்த நிசன்சா கசுன்தி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த நயனதாரா ஜயசூரிய ஆகியோர் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் முதல் பதினைந்து மாணவர்களில் 12 பேர் மாணவியராவர். கொழும்பு மாவட்டத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் முதல் பதினைந்தாவது இடத்துக்குள் இடம்பிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகேஸ்வரன் பிரசாத் 

 


There is 1 Comment

Veery Good

Add new comment

Or log in with...