சாதனையுடன் சதம் அடித்தார் முன்ரோ நியூசிலாந்து 119 ஓட்டங்களால் அபார வெற்றி | தினகரன்

சாதனையுடன் சதம் அடித்தார் முன்ரோ நியூசிலாந்து 119 ஓட்டங்களால் அபார வெற்றி

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் முன்ரோ, தனது மூன்றாவது ரி-ருவென்ரி சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியிலேயே அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

இப்போட்டியில், 47 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 சிக்ஸர்கள், 3 பவுண்ரிகள் அடங்களாக சதத்தை அடித்தார்.

இந்த சதத்தின் மூலம் ரி-ருவென்ரி போட்டியில் மூன்று சதங்கள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் தன்வசப்படுத்தினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு

243 ஓட்டங்களை பெற்றது.அவ்வணி சார்பாக குப்தில் 63 ஓட்டங்களையும் முன்ரோ 104 ஓட்டங்களையும் புரூஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் மேற்கிந்திய தீவு சார்பாக

பரத்வைட் இரண்டு விக்கெட்டையும் டைலர்,எம்ரிட் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

244 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய மேற்கிந்திய அ

தீவு அணி 16.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டையும் இழந்து

124 ஓட்டங்களை பெற்று 119 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பிளட்சர் 46 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடுமலான ஓட்டமாகும்.

பந்து வீச்சில் சௌதீ 3 விக்கெட்டையும் சோதி ,போல்ட் தலா இரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.இப்போட்டியின் நாயகனாக முன்ரோ தெரிவானார்.3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 3-0 ஏ

தொடரை கைப்பற்றியது.மேற்கிந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 1999ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


There is 1 Comment

Whats app ஊடாகவும் தங்களது சேவையை தொடர்ந்தால் இன்னும் மாற்றங்கனை காணலாம்

Pages

Add new comment

Or log in with...