உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை | தினகரன்

உள்ளூராட்சி சபை வர்த்தமானிக்கு இடைக்கால தடை

 

உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு வாக்காளர்களால் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம்
இவ்வுத்தரவை இன்று பிறப்பித்தது.

குறித்த மனு, இன்றையதினம் (22) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க, ஷிரால் குணரத்ன மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஆராயப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு விதிக்கப்பட்டது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிபிட்டிடிய, ஹாலிஎல ஆகிய மாகாண சபை எல்லைக்குட்பட்ட ஆறு பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரதிவாதிகளாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா, அவ்வமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக கூடி ஆராயவுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான வேட்பு மனு திகதி உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


There is 1 Comment

தமிழர் பிரச்சனை தேர்தல் முடியுமட்டும் கப் சிப்

Pages

Add new comment

Or log in with...