ஹற்றன் நெஷனல் வங்கிக்கு இரட்டை வெற்றி | தினகரன்

ஹற்றன் நெஷனல் வங்கிக்கு இரட்டை வெற்றி

 

வர்த்தக வலைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக நிறுவன அணிகளுக்கு இடையிலான ஏ பிரிவு வலைப்பந்தாட்டப் போட்டிகளில் ஹற்றன் நெஷனல் வங்கி சம்பியனானது.

டொரிங்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செலான் வங்கி அணியின் கடும் சவாலை முறியடித்த ஹற்றன் நெஷனல் வங்கி அணி 51 – 46 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.

இப் போட்டியின் இடைவேளையின்போது செலான் வங்கி 25 – 21 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் வேகம், விவேகம், விறுவிறுப்பு அனைத்தையும் பிரயோகித்த ஹற்றன் நெஷனல் வங்கி அணியினர் சிறந்த நுட்பத்திறனுடன் விளையாடி வெற்றிபெற்றனர். கலப்பு இனத்தவர் பிரிவிலும் இந்த இரண்டு வங்கிகளின் அணிகளே இறுதிப் போட்டியில் மோதின.

இதில் செலான் வங்கி அணியை 21–10 என்ற கோல்கள் அடிப்படையில் ஹற்றன் நெஷனல் வங்கி வெற்றிகொண்டு இரட்டை சம்பியனானது.

பி பிரிவில் நேஷன் ஸ்ட்ரஸ்ட் வங்கி அணியை 29–19 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட கொமர்ஷல் வங்கி அணி சம்பியனானது.

சி பிரிவில் எச்.எஸ்.பி.சி. அணியை 28 – 14 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மாஸ் ஷேட்லைன் சம்பியனானது.

வர்த்தக வலைப்பந்தாட்டப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றிய டபிள்யூ.என்.எஸ் அணியை 25–8 என வெற்றிகொண்ட ஓமேகா ஏ அணி டி பிரிவில் சம்பியனானது.

வலைப்பந்தாட்ட இராணியாக ஹற்றன் நெஷனல் வங்கி வீராங்கனை கயனி திசாநாயக்க முடிசூடப்பட்டார்.

அதி சிறந்த கோல்போடும் (கோல் ஷூட்டர்) வீராங்கனைக்கான விருதை செலான் வங்கி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் வென்றெடுத்தார். 


There is 1 Comment

good

Pages

Add new comment

Or log in with...