இலங்கை - சீன வர்த்தக ஒத்துழைப்பு வெற்றிப் பாதையில் | தினகரன்

இலங்கை - சீன வர்த்தக ஒத்துழைப்பு வெற்றிப் பாதையில்

 

சீனாவுக்கு அண்மித்ததான இலங்கையின் புவியியல் அமைப்பும் அந்நாட்டுடன் எமக்குள்ள ஆறு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட இராஜதந்திர உறவுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கைக்கு அபிவிருத்தி வாய்ப்புகளை இப்போது வழங்குகின்றன.

கடந்த வருடம் சீன ஜனாதிபதி யீ ஸியான் லிங்க் இலங்கைக்கு வருகை தந்தது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேம்படுவதற்கு ஒரு ஊக்கியாக அமைந்தது. 1986ம் ஆண்டு அப்போதைய சீனத் தலைவர் லீ ஸியானியானின் விஜயத்தை அடுத்து யீ ஸிய்யான்லிங்கின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக அவதானிகளால் நோக்கப்பட்டது.

தற்போதைய சீன ஜனாதிபதியின் விஜயத்தின் மூலம் சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 500 Fortune என்ற சீன நிறுவனங்களின் குழுமம் ஒன்று அடுத்து வரும் 3-5 வருடங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இங்கு முதலீடு செய்ய இணங்கியிருக்கிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் சீன – இலங்கை வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு வெற்றி பெறும் என நம்பலாம்.

இனி, இந்த பரஸ்பர ஒத்துழைப்பின் உச்ச நன்மைகளை எவ்வாறு அனுபவிக்கலாம் என்பதற்கான வழிவகைகளை நாம் தேட வேண்டும். இலங்கை தனது நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதுதான் அதற்கான ஒரே வழி. பொருட்கள், சேவைகள், முதலீடு, வர்த்தக வசதி, தீர்வுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, உல்லாசப் பிரயாணம் மற்றும் மனித வளங்கள் ஆகிய விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் அடங்கியிருக்க வேண்டும்.

இலங்கையில் சீன உல்லாசப் பிரயாணிகளின் வருகையை அதிகரிக்க விசாலமான வழி இருக்கிறது. இங்கு வரும் உல்லாசப் பிரயாணிகளில் சீனாவிலிருந்து தான் அதிகளவில் வருகிறார்கள் என்ற உண்மையை நாம் கவனிக்க வேண்டும். சீன உல்லாசப் பிரயாணிகளின் வருகை இப்போது துரிதமாக அதிகரித்து வருகிறது. உல்லாசப் பிரயாணத்துறை பொருளாதார முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரச மூலோபாயத்தின் ஆறாவது அம்சமாக இருப்பதால் சீனாவுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் உல்லாசப் பிரயாணத்துறைக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். இதன் மூலம் அந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதி நன்மையை நாம் தொடர்ந்தும் அனுபவிக்கலாம். சீனாவும் அதன் அயல்நாடுகளும் உலகின் வளர்ந்து வரும் நாடுகள் உள்ள பகுதியில் அமைந்திருப்பதாலும் பொதுவான நலன்களைக் கொண்டிருப்பதாலும் இந்த நாடுகளிடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருகிறது.

ஹம்பாந்தோட்டையை மையமாகக் கொண்ட பொருளாதார வலயத்தின் ‘One Belt One Road’ என்ற தொனிப்பொருளிலான வர்த்தக, பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு இலங்கைக்கும் அயலிலுள்ள சீன நட்புறவு நாடுகளான கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார, கலாசார, தொடர்புத்துறை உறவுகளை மேம்படுத்துவதற்கு மிகப் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாக இருந்தாலும் அந்த நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதை தடை செய்கிறது.

அத்துடன், பொதுவான பிராந்திய சமாதானம், ஸ்திரத்தன்மையையும் அது பாதிக்கிறது. இது இவ்விதமிருக்க, சீனா மற்றும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கிடையில் அடிக்கடி தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதால் அவற்றின் பரஸ்பர நட்புறவுகள் மேலும் வளர்ச்சியடைய அது பெரும் உந்து சக்தியாக விளங்குகின்றது. எனவே, மக்களுக்கிடையிலான தொடர்புகள், உறவுகள், மனித நலன்கள் என்பவற்றை நாம் வலுவுள்ளதாக்க வேண்டும். அரசும், ஊடகங்களும், அரபு சாரா அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மக்களின் புரிந்து கொள்ளுதலை விருத்தி செய்வதும் அவசியம்.

இதற்கு முன்னோடியாக Pathfinder Foundation என்ற அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று பெல்ஜிங்கைத் தளமாகக் கொண்ட சமாதான, ஆயுத வலிமை குறைப்புக்கான சீன மக்கள் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அண்மையில் சீனாவுக்கு வர்த்தக ஊக்குவிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. இதற்கென இலங்கை சீன நிபுணர்கள் கொண்ட ஆலோசனை பேரவை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரவையானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காணப்படும் பொருளாதார, அரசியல், கலாசார விடயங்களை உணர்ந்து கொள்வதற்கு தொழில்நுட்ப உபகுழுக்களை நியமித்துள்ளது.


There is 1 Comment

Good

Pages

Add new comment

Or log in with...