கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில் உள்ள குழந்தை பெண்ணா, ஆணா என்று தெரிந்து கொள்ள ஆவளாக இருப்பார்கள்.
அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள்.
இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.
வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்
கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.
தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.
இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம்.
ஆகவே இதயத் துடிப்பை கணக்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.
சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.
பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.
வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம்.
மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.
There are 16 Comments
Try panni parkara
Super tips thanks
Arumaiyana tip
Super tips thank you.....
Super
thanks
Thanks
Intresting.thanks
super tips but only 75%
super
நன்றி
நன்றி
நன்றி
Super
நான்
En first baby yoda heart beat
Pages
Add new comment