விஜயதாச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஆராய விசேட குழு | தினகரன்

விஜயதாச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஆராய விசேட குழு

லக்ஷ்மி பரசுராமன்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தினகரனுக்குத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மூவரடங்கிய குழுவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை(21) தனது இறுதித் தீர்மானத்தை முன்வைக்குமென்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்தது. எனினும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதா , இல்லையா? என்பது தொடர்பில் அன்றையதினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் ஆராயும் முகமாகவே பிரதமர் தலைமையிலான விசேட குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கமைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். ஊழல் மோசடிகளுக்கெதிரான வழக்குகள் தாமதமாவது மற்றும் தமக்கான கூட்டுப் பொறுப்புக்களை மீறி செயற்படுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியில் பலரும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மத்திய செயற்குழுவில் விரிவாக ஆராயப்பட்டது என்கின்றபோதும் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஐ.தே.க செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்றுது. இதன்போது பல அமைச்சர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். 


There is 1 Comment

AFTER RAVI KARUNANAYAKE, NOW YOU ARE ALL ARE CHASING BEHIND Dr. WIJEYDASA – MINISTER OF JUSTICE AND BUDDHA SASANA (A PATRIOT) WITH STUPID ALLEGATIONS. Dr. WIJEYDASA – MINISTER OF JUSTICE AND BUDDHA SASANA IS AN OUT-SPOKEN PERSONALITY AND A POLITICIAN WHO HAS DEEP LOVE FOR HIS MOTHERLAND. WHEN THE YAHAPALANA GOVERNMENT INDEED HAS TO TAKE ACTION AGAINST CORRUPT MINISTERS AS TOLD DURING THEIR PROPAGANDA MEETINGS IN 2015 AND PROMISES MADE TO THE GENERAL PUBLIC THAT THOSE ROGUES WILL BE PUNISHED, IT SEEMA THAT THE YAHAPALANA GOVERNMENT HAS ALLOWED THEM TO GO SCOTH-FREE. WHAT ABOUT THE CABINET MINISTERS AGAINST WHOM SUBSTANTIATIVE CORRUPTION COMPLAINTS HAVE BEEN MADE? TWO OF THE MOST WANTED MINISTERS FOR SUCH CORRUPTION ARE, A MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY AND THE OTHER IS A MINISTER WHO IS A CLOSE ASSOCIATE OF DR. NEVILLE FERNANDO. THE PRESIDENT SHOULD BE BOLD ENOUGH TO BRING THEM TO BOOK TOO. IF THE COMPLAINTS AGAINST THEM IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION. Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer Trincomalee District and Stalwart and Convener - "The Muslim Voice".

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...