வரவு செலவு திட்டம் 2018 - Live | தினகரன்

வரவு செலவு திட்டம் 2018 - Live

Budget 2018

Fri, 11/10/2017 - 11:04

பி.ப. 6.00: வரவு செலவுத் திட்ட முழு உரை   Download PDF

பி.ப. 5.49: பாராளுமன்றம் நாளை (10) முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது

பி.ப. 5.40: வரவு செலவு திட்ட ஆய்வு தொடர்பில் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

பி.ப. 5.40: எதிர்வரும் 2018 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் குறுந்தகவல் (SMS) மூலமான சந்தைப்படுத்தல் செய்திகளுக்கு, செய்தி ஒன்றுக்கு ரூபா 0.25 கட்டணம் அறவிடப்படும்.

பி.ப. 5.39: இன்று நள்ளிரவு (10) முதல் அமுலாகும் வகையில், அருந்த முடியாத மதுபானங்களுக்கு லீட்டருக்கு ரூபா 15 வரி அறவிடப்படும்.

பி.ப. 5.38: மதுவரி வருமான முகாமைத்துவ தொகுதி அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 5.38: சிகரட் இறக்குமதி மற்றும் சுருட்டு இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

பி.ப. 5.37: 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல், இறக்குமதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் தன்னியக்க முறையில் மேற்கொள்ளப்படும்.

பி.ப. 5.36: தடையின்றிய வர்த்தகம் அபிவிருத்தி செய்யப்படும். புதிய சுங்க சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 5.36: 2018 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், வங்கிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், ரூபா 1,000 இற்கு கடன் மீள செலுத்தும் வரி ரூபா 0.20

பி.ப. 5.35: 2018 ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசாங்க முதலீடுகள் குறைக்கப்படமாட்டாது.

பி.ப. 5.35: 2018 ஆம் ஆண்டு கடன் மீள செலுத்துவதானது ரூபா 1,970 மில்லியன்.

பி.ப. 5.34: ஒவ்வொரு வருடமும், ரூபா 600 மில்லியன் பிணை முறி காணப்படுகின்றது. 

பி.ப. 5.34: எதிர்வரும் மூன்று வருடங்களில் ரூபா 7,000 பில்லியன் கடன் தொகை மீள செலுத்த வேண்டியுள்ளது.

பி.ப. 5.33: நுகர்வோர் அதிகாரசபை மற்றும் அது தொடர்பான சட்டமூலம் வலுவாக்கப்படும்.

பி.ப. 5.33: கட்டணமின்றி பொது இடங்களில் சில்லறை வியாபாரம் ஆரம்பிக்கப்படும். தனியார் பிரிவின் கீழ் அது ஆரம்பிக்கப்படும்.

பி.ப. 5.30: காணாமல் போனவர்களுக்கான அலுவலக நடவடிக்கைகள் இந்த வருடத்திலிருந்து செயற்படும். அதற்காக ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.29: வசந்தம் தொலைக்காட்சி அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 5.28: யாழ்ப்பாணத்தில் புதிய பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 5.26: மயிலாடுதுறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 5.26: உணவு பதப்படுத்தும் மையங்கள் இரண்டு ஏற்படுத்தப்படும்.

பி.ப. 5.24: வடக்கில் மேலும் 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும்

பி.ப. 5.23: யுத்தத்தை வென்றபோதும், நாம் மக்களை வெற்றிகொள்ளவில்லை.

பி.ப. 5.23: யுத்தத்தை வென்றபோதும், நாம் மக்களை வெற்றிகொள்ளவில்லை.

பி.ப. 5.23: அரசாங்க ஊழியர்களுக்கான வாகன கொள்வனவு தொடர்பிலான வரிச் சலுகை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.

பி.ப. 5.22: 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஓய்வு பெறுவோருக்கு ஆயுள் வரையான அக்ரஹார உதவி வழங்கப்படும்.

பி.ப. 5.21: அரச ஊழியர்கள் 500 இற்கும் அதிகமான நிறுவனங்களில், குழந்தைகள் பராமரிப்பு மத்திய நிலையம் அமைக்கப்படும்.

பி.ப. 5.21: அரச பிரிவின் சம்பள பிரச்சினை தொடர்பில் முழு ஆய்வொன்று மேற்கொள்ளப்படும்.

பி.ப. 5.21: மாகாண சபைகளின் பலம் அதிகரிக்கப்படும்.

பி.ப. 5.20: அரச ஊழியர்களுக்கென ஒன்றிணைந்த சம்பள முறைமை.

பி.ப. 5.20: அரச ஊழியர்களுக்கென ஒன்றிணைந்த சம்பள முறைமை.

பி.ப. 5.20: ஒன்றிணைந்த கருவூல தகவல் முகாமைத்துவ தொகுதி உருவாக்கப்படும்.

பி.ப. 5.20: ஒன்றிணைந்த கருவூல தகவல் முகாமைத்துவ தொகுதி உருவாக்கப்படும்.

பி.ப. 5.20: ICTA நிறுவனத்திற்கு ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.19: டிஜிடல் மயப்படுத்தல் மூலம் அரச சேவை ஒழுங்கமைக்கப்படும்.

பி.ப. 5.18: வளர்ந்து வரும் நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் மக்கள் வாழும் நகரை அண்டிய பகுதியில், பொழுதுபோக்கு வசதிகள் வழங்கப்படும். இது தொடர்பிலான சர்வதேச அளவிலான மையம் ஒன்று மொரட்டுவவில் நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 5.17: வளர்ந்து வரும் நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் மக்கள் வாழும் நகரை அண்டிய பகுதியில், பொழுதுபோக்கு வசதிகள் வழங்கப்படும். இது தொடர்பிலான சர்வதேச அளவிலான மையம் ஒன்று மொரட்டுவவில் நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 5.17: சமய தலங்கள் பாதுகாக்கப்படும். கலை மற்றும் கலைஞர்கள் பாதுகாக்கப்படுவர். பௌத்த நூலகமொன்றை ஆரம்பிக்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும். சமய தலங்களின் புனரமைப்பிற்கு, ரூபா 250 மில்லியன். அநுராதபுரம், தலதா மாளிகை, மடு, நல்லூரில் ஓய்வு மண்டபம் நிர்மாணிக்க ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.15: பிரதேச அபிவிருத்தி வங்கிகளுக்கு ரூபா 2.5 பில்லியன் முதலீடு வழங்கப்படும்.

பி.ப. 5.14:  மூலதன சந்தை வலுவூட்டப்படும்.

பி.ப. 5.13:  சிறுவயது குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வாக, அவர்களை வேறுபடுத்தி அழைத்துச் செல்வதற்காக வாகனம் கொள்வனவு செய்யப்படும்.

பி.ப. 5.12:  நீதிமன்றத்தினுள் உருவாக்கப்பட்டுள்ள நிதி, ஊழல் உள்ளிட்ட சிறிய, பாரிய வழக்குகள் தாமதமடைதலை தடுப்பது தொடர்பிலான நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நவீன ஒளி, ஒலி பதிவு செய்யும் ரூபா 25 மில்லியன் செலவில் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும்.

பி.ப. 5.10:  இலங்கை பொலிஸின் இணையத்தள விசாரணை பிரிவு வலுவாக்கப்படும். ஐக்கிய நாடுகளின் அமைதி காண் இராணுவம் தொடர்பில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பி.ப. 5.09:  பிரஜா பொலிஸ் நடவடிக்கைகள் தொடர்பில் ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்படும். பொலிஸ் மற்றும் குற்ற நடவடிக்கைகள் தொடர்பிலான பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 5.08:  சஹசர திட்டத்திற்காக தனியார் பிரிவின் உதவி பெறப்படும். ஒன்றிணைந்த அட்டவணை உருவாக்கப்படும்.

பி.ப. 5.07:  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீரமைக்க ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.07:  மத்திய அதிவேக பாதை மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும். கிராமிய பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை சீரமைக்க ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.07:  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகர அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும். 

பி.ப. 5.06:  நாட்டிலுள்ள 25 மாவட்டங்களும் உள்ளடக்கப்படும் வகையிலான அபிவிருத்தி நடவடிக்கைகள். காலி, கண்டி, யாழ்ப்பாணம் அபிவிருத்திக்கு ரூபா 12,000 மில்லியன்.

பி.ப. 5.05:  நகர மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூபா 24,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.05:  ஒன்றிணைந்த வெள்ள கட்டுப்பாட்டு முறையொன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 5.04:  நடுத்தர வருமானம் பெறுவோருக்காக, நியாயமான விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தலையீடு மேற்கொள்ளும். அதற்காக அபிவிருத்தி திட்டங்கள் பல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 5.04:  பெருந்தோட்ட கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான 25,000 வீடுகளுக்கு ரூபா 2,000 மில்லியன்.

பி.ப. 5.03:  வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றம் மேற்கொள்வதற்கான வீடமைப்பில் மேலும் 3,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.03:  நகர குடியிருப்புகளுக்காக ரூபா 17.5 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 5.02:  குறைந்த வருமானம் பெறுவோருக்கு 2020 இல் 20,000 வீடுகள்

பி.ப. 5.01:  மதுபானங்களுக்கு தேசிய கட்டுமான வரி, 2018 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுல்.

பி.ப. 5.01:  மதுபானங்களின் வரிகளில் மாற்றம்.

பி.ப. 5.00:  தனியார் சுகாதார பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.

பி.ப. 5.00:  சுவசெரிய அவசர மருத்துவ ஊர்திக்கு (அம்பியுலன்ஸ்) உதவி வழங்கப்படும்.

பி.ப. 5.00:  தேசிய வைத்தியசாலையில் பாலியல் நோய் பிரிவு உருவாக்கப்படும்.

பி.ப. 4.59:  மாத்தறை சிறுவர் நிர்வாக அலகு கம்புறுபிட்டியவுக்கு கொண்டு செல்லப்படும்.

பி.ப. 4.58:  பேருவளை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ரூபா 375 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.57:  இருதய நோய் நிவாரண அலகு ஒன்றை, ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிக்க ரூபா 400 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.57:  அரசாங்கத்தின் மருந்து வலையமைப்பை சக்திமிக்கதாக மாற்ற ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.57:  குளிர்பானங்களிலுள்ள சீனிக்கு கிராம் ஒன்றுக்கு ரூபா 0.20 வரி அறவிடப்படும்.

பி.ப. 4.55:  சிறுநீரக பிரிவுகள் மூன்று நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 4.55:  பிரபலங்களின் விளையாட்டுக்காக சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவம் செய்வோருக்காக ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.54: விளையாட்டு காலணிகள் இறக்குமதிக்கான வரி நீக்கப்படும்.

பி.ப. 4.53:  சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அரச மற்றும் தனியார் பிரிவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.52:  2020 தெற்காசிய விளையாட்டை இலங்கை நடாத்துகின்றது. இதற்காக தியகம அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.52:  மாவட்டம் மற்றும் மாகாண விளையாட்டரங்குகள் அபிவிருத்தி செய்யப்படும். திகண, பொலன்னறுவை, கல்முனை விளையாட்டரங்குகள் அபிவிருத்தி செய்யப்படும். மாத்தளையில் ஹொக்கி விளையாட்டரங்கு அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.51:  கிராமிய விளையாட்டரங்குகள் 100 இனை அபிவிருத்தி செய்ய ரூபா 100 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப. 4.51:  மஹபொல தேர்வு தொடர்பில் அவதானம் செலுத்தும் வருமான மட்டம், ரூபா 3 இலட்சத்திலிருந்து ரூபா 5 இலட்சமாக அதிகரிக்கப்படும்.

பி.ப. 4.50:  தேசிய வைத்திய முதுகலை பாடநெறியொன்று அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 4.49:  சம்பிரதாயபூர்வமற்ற பட்ட பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 4.48:  வைத்திய கல்வியை முன்னேற்றுவதற்கு ரூபா 1,250 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.46:  விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

பி.ப. 4.45:  ஆசிரியர்களை பயிற்றுவிக்க ரூபா 1,200 மில்லியன். ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ரூபா 750 மில்லியன்.

பி.ப. 4.45:  தேவைக்கேற்ற வகையில் பாடங்கள் மாற்றப்படும். கல்வி முறைமையை சர்வதேச மாணவர் வலுவூட்டும் முறை உருவாக்கப்படும்.

பி.ப. 4.43:  தேசிய கல்வி நிறுவனம் மீளமைக்கப்படும்.

பி.ப. 4.43:  13 வருட கல்வியையை வழங்கும் நோக்கில் கல்விக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூபா 3,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.ப. 4.42:  மாணவர் காப்புறுதி முறை மற்றும் டெப் கணனி வழங்கும் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

பி.ப. 4.41:  புதிய தொழில் பயிற்சி பாடசாலைகள் 05 நிர்மாணிக்கப்படும்.

பி.ப. 4.40:  இளம் படையணியை வலுவூட்ட ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.39:  தொழில் தொடர்பில் தயார்படுத்தும் நிதியத்திற்கு ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கப்படும். ரூ.6,000 வரையான வாழ்வாதார உதவி அரசாங்கத்தினால் வழங்கப்படும்.

பி.ப. 4.37:  முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கு முதலீடு செய்யப்படும்.

பி.ப. 4.36:  இளைஞர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாதவர்களாக மாறுகின்ற நிலையில், அது அவர்களுடைய தவறு அல்ல, அரசின் தவறாகும்.

பி.ப. 4.36:  வருடத்திற்கு சுமார் 2 இலட்சம் ஏமாற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் உருவாகின்றனர்.

பி.ப. 4.35:  இளம் தொழில்முயற்சியாளர்களை முன்னேற்றமடையச் செய்யும் பொருட்டு அவர்களுக்கு சமனான வாய்ப்பு வழங்கப்படும்.

பி.ப. 4.34:  அரசாங்க மற்றும் தனியார் ஒன்றிணைந்த வர்த்தக அபிவிருத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 4.32:  பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தொடர்பான காணி கொள்வனவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நீக்கப்படும்.

பி.ப. 4.32:  வியாபார பதிவுகளை இலகுபடுத்த நிறுவனம்.

பி.ப. 4.31:  முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை உருவாக்கப்படும்.

பி.ப. 4.30:  முச்சக்கர வண்டி சாரதிகள் சுற்றுலா வழி காட்டிகளாக மாற்றுவதற்கான இலவச பயிற்சியளிக்கப்படும். 

பி.ப. 4.30:  முச்சக்கர வண்டி தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் 'டுக் டுக்' எண்ணக்கரு அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 4.29:  ஓப் ரோட் (Off Road) மின்சார விளையாட்டு வாகனங்களுக்கு வரிச் சலுகை.

பி.ப. 4.28:  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

பி.ப. 4.27:  மாதுரு ஓயா மற்றும் கல் ஓயாகளை சபாரி வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.27:  உள்நாட்டு விமான நிலையங்கள், தனியார் துறையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.26:  கொழும்பு கோட்டை, நானுஓயா புகையிரத நிலையங்கள், அருங்காட்சியகங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.

பி.ப. 4.25:  சுற்றுலா பயணிகள் விரும்பாத வகையில், மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது மாற்றப்படும்.

பி.ப. 4.25:  சுற்றுலா துறையில் ஈடுபடுகின்ற, வரி செலுத்தாதோரை வரி வலைக்குள் சேர்த்தல்.

பி.ப. 4.24:  சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு கடன் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பி.ப. 4.23:  2020 இல் சுற்றுலா பயணிகள் 4.5 மில்லியன் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பி.ப. 4.23:  மரம் மற்றும் மரம் சார் உற்பத்தி அதிகரிப்பு உரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. அது தொடர்பிலான தயாரிப்புகளை மேற்கொள்ளும் மத்திய நிலையம் ஒன்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும்.

பி.ப. 4.22:  மாணிக்க கைத்தொழிலை ஊக்குவிக்கும் பெருட்டு, கற்களை வெட்டுவதற்காக கொண்டு வரப்படும் மாணிக்க கற்களுக்கான தேசிய கட்டுமான வரி நீக்கப்படும்.

பி.ப. 4.22:  இலங்கையின் பூ உற்பத்தி, வெளிநாட்டு சந்தையில் நுழைவதற்கான முன்னேற்றத்தை வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் உயர்த்தப்படும்.

பி.ப. 4.20:  வாழைப்பழம் மற்றும் அன்னாசி ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். உயர் உற்பத்தி பெறுமானத்தை கொண்ட நாற்று உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

பி.ப. 4.20:  கோழி கட்டுப்பாடு, தேசிய சோளம் இறக்குமதி இலகுபடுத்தப்படும். கோழி எண்ணிக்கை 500 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை

பி.ப. 4.19:  இறப்பர் கைத்தொழிலுக்கு வலு சேர்க்கும் வகையிலான உற்பத்திகளுக்கு நிவாரணம்.

பி.ப. 4.19:  தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்தி தொடர்பில், தேசிய கட்டுமான வரி (NBT) ஒரு வருடத்திற்கு நீக்கப்படும்.

பி.ப. 4.19:  தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்தி தொடர்பில், தேசிய கட்டுமான வரி (NBT) ஒரு வருடத்திற்கு நீக்கப்படும்.

பி.ப. 4.19:  சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலனுக்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.18:  வாசனத் திரவிய கைத்தொழில் தொடர்பில் நிவாரணம் வழங்கப்படும். தரம் மிக்க உயர் உற்பத்திகளுக்கு சட்ட திட்டங்கள். கறுவா மற்றும் வத்தல் மிளகாய்களுக்கு உயர் பெறுமதி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.

பி.ப. 4.15:  பால், மருந்து போன்ற உற்பத்த தொடர்பிலான கைத்தொழில் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை.

பி.ப. 4.13:  தரத்தை பரீட்சிக்கும் நிறுவனங்களை (தர நிர்ணய சபை போன்ற) அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 4.11:  ஏற்றுமதி செய்யும் தேசிய கைத்தொழிற்சாலைகளை வலுவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 4.08:  தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பில் கொழும்பு மற்றும் மொரட்டுவையில் பாடநெறிகள்.

பி.ப. 4.07:  தகவல் தொழில்நுட்ப துறையின் அபிவிருத்திக்கு ரூபா 3,000 மில்லியன்

பி.ப. 4.06:  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக கடனை பெறுவதற்கான பிணை நிதியத்திற்கு ரூபா 500 மில்லியன்.

பி.ப. 4.05:  விசேட தேவையைக் கொண்டோருக்கான வியாபாரம் தொடர்பில் வட்டி நிவாரணம்.

பி.ப. 4.05:  பெண்களை வலுவூட்டுவதற்காக அவர்களது வியாபாரத்தை சக்திமிக்கதாக்க, பெண் சுயதொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வசதி.

பி.ப. 4.04:  பங்குதாரர்களை கொண்ட சிறு வியாபாரத்தை ஏற்படுத்துவதற்கு உதவியளிக்கப்படும். இதற்கென ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.03:  ஏற்றுமதி, இறக்குமதி அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படும்.

பி.ப. 4.03:  சிறு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிவாரணம் வழங்கப்படும். வர்த்தக திறமையை ஊக்குவிக்க நிதி விஸ்தரிக்கப்படும். இதற்கு ரூபா 2,200 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.01:  ஏற்றுமதி, இறக்குமதி அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படும். இதற்கென ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 4.01:  சிறு வர்த்தகர்களுக்கான வர்த்தக யோசனைகள் தொடர்பான சாத்தியங்களை கருத்திற்கொண்டு, அவர்கள் கடன் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

பி.ப. 4.01:  நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மக்களின் வெற்றிகரமான பயணத்திற்கு அரசாங்கத்தின் உதவி.

பி.ப. 4.00:  நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மக்களின் வெற்றிகரமான பயணத்திற்கு அரசாங்கத்தின் உதவி.

பி.ப. 3.59:  அழிவடையும் வர்த்தகர்களை பாதுகாக்க வேண்டும்.

பி.ப. 3.59:  சிறு வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகர்களுக்கும் வசதிகள் வழங்கப்படும்.

பி.ப. 3.55:  கடல் அட்டை பிடிப்பது மற்றும் பதப்படுத்தல் தொடரபில் விசேட மத்தியநிலையம்.

பி.ப. 3.55:  குளத்துடனான கிராமம் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.ப. 3.54:  வெல்லமங்தரவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

பி.ப. 3.53:  ஆழ் கடல் மீன்பிடிக்கான, 55 அடியிலும் நீளமான பல்தேவை படகுகளுக்கான செலவில் 50% அரசினால் செலுத்தப்படும்.

பி.ப. 3.52:  பல்தேவை படகுகளின் விளைச்சலை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

பி.ப. 3.52:  வளிமண்டலவியல் தரவுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

பி.ப. 3.52:  வளிமண்டலவியல் திணைக்களம் மேம்படுத்தப்படும். 

பி.ப. 3.52:  நெல், சோளம், சோயா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகிய ஆறு  பயிர் வகைகளுக்கு  ஏக்கருக்கு ரூபா 40,000 நிதி. பங்களிப்பு காப்புறுதிக்கு ரூபா 3,000 மில்லியன்

பி.ப. 3.52:  விவசாயிகளுக்கு காலநிலை அட்டவணையின் அடிப்படையிலான காப்பீட்டு முறை. 

பி.ப. 3.50:  மழை நீரை முறையாக சேகரிப்பதற்கு, சிறிய மற்றும் நடுத்தர குளங்களை தூர்வார ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 3.48:  விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்புபடுத்தும் செயலாளர் காரியாலயத்திற்கு ரூபா 25 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 3.47:  ரூபா 1,000 மில்லியன் செலவில் நீர்கொழும்பு, ருகவ, புத்தளம், நந்திக்கடால் உள்ளிட்ட 10 களப்புகள் புனரமைப்பு செய்யப்படும்.

பி.ப. 3.45:  கையடக்க தொலைபேசி கோபுரங்கள் நிர்மாணத்தை தடுக்கும் வகையில் புதிய வரி.

பி.ப. 3.43:  தெஹிவளையில் கூடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள மிருகங்களை, திறந்த கூடு எண்ணக்கருவிற்குட்படுத்தப்படும். பின்னவல யானைகள் சரணாலயம் புனரமைக்கப்படும். அதற்கென ரூபா 75 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 3.40:  அனைத்து பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், நடைபயிற்சி வசதி கொண்ட உடற்பயிற்சி மையங்கள் உருவாக்க ரூபா 1,500 மில்லியன்.

பி.ப. 3.39:  அறுவக்காடு கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ரூபா 3000 மில்லியன் ஒதுக்கப்படும்.

பி.ப. 3.39:  பொலித்தீன் உற்பத்திக்கு வரி. கிலோ ஒன்றை உற்பத்தி செய்வதற்கு ரூபா 10 வரி அறவிடப்படும்

பி.ப. 3.39:  டீசல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி வரி ரூபா 50 ஆயிரத்தால் அதிகரிக்கப்படும்.

பி.ப. 3.38:  எஞ்சின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்ட வரி சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

பி.ப. 3.37: மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ்களுக்கு காபன் வரி அறவிடப்படும்

பி.ப. 3.34: இலங்கை போக்குவரத்து சபை பசுமைப்படுத்தப்படும்.

பி.ப. 3.33: மின்சார முச்சக்கரவண்டி மற்றும் பஸ்களின் பெறுமதி : கடன் வீதம் = 90 : 10

பி.ப. 3.32: அதி சொகுசு மோட்டார் வாகனங்களுக்கான வரி ரூபா 25 இலட்சத்தினால் அதிகரிக்கப்படும்.

பி.ப. 3.31: மின்சார வாகனங்களுக்கான வரி ரூபா 10 இலட்சத்தினால் குறைக்கப்படும்.

பி.ப. 3.30: மின்சாரத்தில் இயங்கும் பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வரிச்சலுகை

பி.ப. 3.30: 2025 இல் அரசாங்கத்தின் அனைத்து வாகனங்களும் ஹைபிரிட் அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக இருக்கும். 

பி.ப. 3.30: 2040 இல் பெற்றோலிய வாகனங்கள் இன்றிய வாகனங்கள் மாத்திரம். 

பி.ப. 3.18: அரசா வருமானம், மொத்த தேசிய உற்பத்தியில் 20% வீதத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். 

பி.ப. 3.16: அரசாங்க வருமானம், மொத்த தேசிய உற்பத்தியில் 14% ஆக அதிகரிக்க முடிந்தது.

பி.ப. 3.14: அரச நிதி முகாமைத்துவத்தை ரவி கருணாநாயக்க மிக சிறப்பாக மேற்கொண்டார். அவருக்கு நன்றி

பி.ப. 3.13: இலங்கையில் மீதொட்டமுல்லையிலும் பாரக்க அதிக கடன் சுமையைக் கொண்டதாக காணப்பட்டது.

பி.ப. 3.07: நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவு திட்ட உரை ஆரம்பம்.

பி.ப. 3.00: பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்.

பி.ப. 2.45: வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.