புத் 67 இல. 27

மன்மத வருடம் ஆனி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரமழான் பிறை 17

SUNDAY JULY 05 2015

 

 

எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஈழத் தமிழர் வாழ்வில் முழுமையான விடிவு ஏற்படும் என இந்தியா நம்பிக்கை

பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய அரசாங்கம் அமைவது அவசியம்

மைத்திரி, ரணில் மீது நம்பிக்கை வெளியிட்டு இரு பிரதான இந்திய கட்சிகளின் மூத்த தலைவர்கள் கருத்து

இலங்கையில் அமைதியான சூழல் அமைய வேண்டுமென்பதுடன் அங்கு வாழும் தமிழர் சகல அரசியல் அதிகாரங்களையும் பெற்றுத் தம்மைத் தாமே ஆளுகின்ற சுதந்திரமான நிலையை எட்ட வேண்டும் என்பதுவுமே இந்தியாவிலுள்ள சகல பிரதான கட்சிகளினதும் நிலைப்பாடாகும் என இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளினது மூத்த தலைவர்களான பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விவரம்


 

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாளான புதன்கிழமை (01) தீமிதிப்பு இடம்பெற்றது. மகா மண்டபத்தில் 1000 மடைகள் வைத்து அம்மனுக்கு விசேட பூஜை இடம்பெற்று தேவாதிகள் சகிதம் அடியவர்கள் தீமிதிப்பில் ஈடுபட்டு தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பெண்ணொருவர் தனது குழந்தையுடன் தீ மிதிப்பதை படத்தில் காணலாம். (படம்: சிவம் பாக்கியநாதன்)


 

தமிழ்நாடு, வடபழனியில் நடைபெற்ற எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சிவ லிங்கம் சதீஷ்குமார் எழுதிய 'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து முதல் பிரதி பெறுகிறார் புரவலர் ஹாசிம் உமர். பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச். வி. ஹாண்டே, நடிகர் எஸ். வி. சேகர், தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர், நூலாசிரியர், கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் காணப்படுகின்றனர். (சென்னையிலிருந்து இன்பாஸ் சலாஹுதீன்)

கூட்டமைப்பின் முன்னாள் ஆP க்கள் பலருக்கு நியமனப் பத்திரம் நிராகரிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த முன்னாள் பிரதிநிதிகள் பலருக்கு வேட்பாளர் நியமனம் வழங்காதிருக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் சிலரும் அதேவேளை பிரபல்யமிக்க அமைச்சுக்களின் கண்காணிப்பு பதவி வகித்த உறுப்பினர்களும் இதில் அடங்குவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 விவரம்»

வேட்பு மனுக்கள் நாளை முதல் ஏற்பு:

வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்; உறுதியான தீர்மானமின்றி சிறு கட்சிகள்

பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனப்பத்திரம் ஏற்கும் பணிகள் நாளை (6) முதல் 13 ஆம் திகதி வரை இடம்பெறும். வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு நல்கும் தமிழ் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளின் நியமனப் பத்திரத் தாக்கல் எதிர்வரும் தினங்களிலோ அல்லது 13ஆம் திகதியோ இடம்பெறும்.

 விவரம்»

நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ஒருவர் பதவியிழந்து வீடு செல்ல நேரிடும்

தமிழரசுக் கட்சியை நம்பி நட்டாற்றில் நிற்பதாக அனந்தி கவலை

அரசியலுக்கு வரவேண்டுமென நிர்ப்பந்தத்தில் விருப்பமின்றி அரசியலுக்கு வந்த தன்னை, தமிழரசுக் கட்சி நட்டாற்றில் விட்டுவிட்டு சென்றுவிட்டதென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட விரும்புவதாகவும், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளதெனவும் அனந்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், தான் வேறு கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.