புத் 67 இல. 21

மன்மத வருடம் வைகாசி மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 05

SUNDAY MAY 24 2015

 

 

வித்தியா

வடக்கில் போட்டி அரசியல் நடத்த கிடைத்த துரும்பல்ல

அரசியல்வாதிகள் சிலரின் அருவருக்கத்தக்க செயலுக்கு புத்திஜPவிகள் கண்டனம்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமையை வைத்துக் கொண்டு வடக்கில் அரசியல் ரீதியாகத் தமது காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தி லாபமீட்ட முனையும் சில அரசியல்வாதிகளின் செயற் பாடு களை வடக்கு புத்திஜீவிகள் கடுமையாகக் கண்டித் துள்ளனர். கொலைகாரர்கள் இவர்கள் தான் என ஏறத்தாழ இனங்காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் சில அரசியல்வாதிகள் தமது பழைய அரசியல் பகைகளைத் தீர்த்துக் கொள்ளவும், சிலர் அரசியல் பிரசாரம் தேடவும் அப்பாவிச் சிறுமியான வித்தியாவின் மரணத்தைப் பயன்படுத்தி வருவதை புத்திஜீவிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

விவரம்


 சிரேஷ்ட எழுத்தாளர் சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதிய “வெளிநாடுகளில் தமிழர்” எனும் நூல் மலேசியாவில் அந்நாட்டு அமைச்சர் டத்தோ.டாக்டர் லோகபால மோகனால் வெளியிட்டு வைக்கப்பட்டது. (விபரம் 02ஆம் பக்கத்தில்)
 

வித்தியாவிற்கு நீதி கேட்ட மட்டக்களப்பு மாணவர்கள்

வாயையும் கையும் கட்டி போராட்டம்!

புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலும் வீதிக்கிறங்கி, கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் கைகளையும், வாயையும் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

மிஹிந்தலை ஆலோக பூiஜ


க்க பூஜை 53 ஆவது வருட மாக இம்முறையும் மிக சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிஹிந் தலை ஆலோக்க . . . . . . .

 விவரம்» 

யாழில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த நீதிமன்றத் தடை

பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குள் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அல்லது பேரணிகள் செல்லவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தை அடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.

 விவரம்»

வித்தியா விடயத்தில் விரைவில் நீதி; மக்களது ஒத்துழைப்பும் அவசியம்

சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் அனுமதியில்லை என்கிறார் பிரதமர்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விவகாரத்தில் நிச்சயமாக நீதி நிலைநாட்டப் படும். அங்கே பொலிஸார் தமது கடமையை சரிவரச் செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். மக்கள் இதனை விளங்கிக் கொண்டு அமைதியாக செயற்பட்டு பொலிஸாருக்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுத்தால் அது நிலைமைகளை மேலும் மோசமாக்கும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரி வித்தார்.

 விவரம்»

யாழில் STF  வருவதை நான் தடுத்தேன்:

வன்முறையைத் தவிர்க்குமாறு சம்பந்தன் வேண்டுகோள்

குற்றவாளிகளை தப்பவிடேன் எனவும் உறுதி

புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது. படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத் தனமானது. சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன். எனவே கைது. . . .

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.