புத் 67 இல. 17

மன்மத வருடம் சித்திரை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 06

SUNDAY APRIL 26 2015

 

 
 

29 இல் பாராளுமன்றம் கலைப்பு?

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அது தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைத்துவிடும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவரம்


தந்தை செல்வாவின் 38ஆவது நினைவுப் பேருரை நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். படத்தில் எம்.பிக்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம். ஏ. சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் சட்டத்தரணி தவராசா ஆகியோர் காணப்படுகின்றனர்.
 

மலையக இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள்

விழிப்பாக இருக்கக் கோருகிறார் அமைச்சர் வேலாயுதம்

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி மலையகத்தில் வாழுகின்ற படித்த அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பணம் பறித்து வருவது மட்டுமல்லாது அவர்களது எதிர்கால வாழ்வையே சீர்குலைத்துவரும் சில தனியார் வேலை வாய்ப்பு முகவர்கள் குறித்து தனக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து தோட்டப்புற மக்களை மிகவும் விழிப்பாக இருக்குமாறும் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கேட்டுள்ளார்.

 விவரம்»

மஹிந்தவின் கோட்டையில் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு நேற்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் நடைபெற் றுள்ளது. நேற்று முற்பகல் இம் மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடை பெற்றுள்ளது. இம்மாநாட்டில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஏ.எச்.எம்.பெளசி, நிருபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, வீ.கே.இந்திக, கமலா ரணதுங்க ஆகியோரும், அம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

 விவரம்»

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம்:

முதல்வர் விக்கி இராஜதந்திர வரைமுறையை மீறினாரா?

ஆராய்கின்றனர் இலங்கை அதிகாரிகள்

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இராஜதந்திர வரைமுறையை மீறியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இலங்கையின் அரசாட்சியின் அடிப்ப டையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாட்டின் தலைவர் ஒருவருக்கு கடிதம் அனுப்ப வேண்டுமாயின், அது வெளியுறவு அமைச்சின் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும் என்று அந்த அமைச்சின் அதிகாரிகள் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.

 விவரம்»

நேபாளத்தில் 7.9 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்

இந்தியாவிலும் பிரதிபலிப்பு: 800 இற்கும் அதிகமானோர் பலி

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து சுமார் 50 மையில் தூரத்தில் 7.6 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புக்கள் அண்டை நாடான இந்தியாவிலும் உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட் டுள்ளன.

 விவரம்»

வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்

பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்

காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.  இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.

 விவரம்»

விசாரணைகளை எதிர்கொள்ள தயார்

- மஹிந்த

தான் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகத் தயாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார். எம்.பிக்கள், பிரமுகர்கள் ஆகியோருக்கு சிறைச்சாலைகளில் சலுகை கள் வழங்கப்படுகின்றமை அசாதாரணமாகும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.