புத் 67 இல. 13

ஜய வருடம் பங்குனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஜமாதுல் ஆகிர் பிறை 07

SUNDAY MARCH 29 2015

 

 

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?

மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி ஏனைய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றாவதாக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கே அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கருத்து நிலவி வருகிறது. எனினும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும், விதிமுறைகளுக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரும், எதிர்க் கட்சிகளும் இணைந்தே தெரிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங் கக் கூடாது என மிதவாதப் போக்குடைய ஒரு தரப்பினரும், அவருக்கே வழங்க வேண்டும் என நாட்டில் இன ஒற்றுமையை விரும்பும் இன்னொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.

விவரம்

எமது நிலம் சீனாவுக்கு உரித்தாக முடியாது

சீனாவில் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கைக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பொருத்தமான முறையில் போர்ட் சிட்டி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 விவரம்»
 

பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன:

எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும்

பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற விதிகள் இருக்கும் போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும்.

விவரம்» 

உலகக் கிண்ணம் யாருக்கு?

இறுதி ஆட்டத்தில் இன்று ஆஸி., நிய+சிலாந்து மோதல்

11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அவுஸ்தி ரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப் பதற்கு இன்றைய ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப் பரீட்சையில் வெல்லப் போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.

 விவரம்»

வடக்கில் கல்வித்துறையை முன்னேற்ற விசேட கவனம்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்

வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்தில் தெரிவித்தார். இதற்கிணங்க இரு மாவட் டங்களும் ஒன்றிணைந்த விசேட செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனுக்கும் கல்வி இரா ஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ் ணனுக்கும் பணிப்புரை விடுத்தார்.

 விவரம்»

தேசப்பற்று என்ற போர்வையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி

இடமளிக்கக் கூடாது என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

தேசப்பற்று என்ற போர்வையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த நாம் முயல வேண்டும். உண்மையான தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக்கொள்வதே ஆகும் என முஸ்லிம் காஸ்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.