புத் 67 இல. 09

ஜய வருடம் மாசி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஜமாதுல் அவ்வல் பிறை 09

SUNDAY MARCH 01 2015

 

 

உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேசம் நம்பிக்கை: ஆனால் தமிழ்
கூட்டமைப்பிடம் இரு வேறு நிலைப்பாடு

அரசின் உறுதியை TNA புரிந்து
கொள்ளாமையினாலேயே எதிர்ப்பு

உண்மை கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி
அஜித் பெரேரா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான சபை இலங்கை மீதான தனது போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை ஆறு மாத காலம் பிற்போட்டு புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அரசாங்கம் சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணையை நம்பிக்கை யுடன் நடத்தத் திட்டமுள் ளது. இவ்விரு செயற்பா டுகளுக்கும் தமிழ் மக்கள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு நிலைப்பாட்டில் குரல் எழுப்பியுள்ளது. இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளை சரியாக புரிந்து கொள்ளாமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர் இவ்விடயத்தை எதிர்த்து வருவதாக பிரதி வெளி விவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

விவரம்


அலரி மாளிகை பூக்கள்
தாவரவியல் பூங்காவிற்கு..

 

 

அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

விவரம்»
 

நிறைவேற்று அதிகார முறைமை:

சு.க. இணங்க மறுத்தால்
முற்றாக ஒழிக்கப்படும்!

மக்களின் ஆணையை
புறந்தள்ள முடியாது!

நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக நீக்க . . . .

விவரம்»

ரிசாத் பதியுதீன் பணம் பெற்று தொழில் வழங்கினாரா?

நிரூபித்தால் பதவி விலகுவேன்- றிப்கான்

அமைச்சர் ரிசாத் பதியுதீன் பணம் பெற்றுக் கொண்டு தொழில் வழங்கினாரென்று எவராவது நிரூபித்தால் மாகாண சபை உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.வடமாகாண சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சர் பற்றி தெரிவித்த கருத்துக்களை மறுதலித்து . . . .

விவரம்» 

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர்
நாளை ஆரம்பம்

இலங்கை விவகாரம் தொடர்பாக ஹ{ஸைன் சுருக்கமாக குறிப்பிடுவார்

அமைச்சர் மங்கள தலைமையில் இலங்கையிலிருந்து குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 வது கூட்டத் தொடர் நாளை 2ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. ஆரம்ப தின நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் . . . . .

 விவரம்»

அடித்து கோமாவாக்கிய பின்னரும் கட்டி வைத்து தாக்கி கொலை;

சிறைகளில் கொல்லப்பட்ட தமிழ் கைதிகள் தொடர்பாகவும் நீதியான விசாரணை தேவை

நீதியமைச்சர் விஜயதாசவிற்கு சரவணபவன்
எம்.பி. கடிதம்

2012 ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச் சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட் டமை தொடர்பாக நீதி விசாரணை நடத்த முன்வந்தமை போன்று கடந்த காலங்களில் சிறைகளில் தமிழ் அரசியல் கைதுகள் படு மோசமாக தாக் கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தமிழ்க் கூட்ட மைப்பின் . . . .

 விவரம்»

நாள் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்க சகல மலையக
கட்சிகளுமே ஆதரவு

முத்து, யோகா, பிரபா, மனோ, சந்திர
ஓரணியில் கருத்து

கூட்டு ஒப்பந்தம் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தின சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும், அமைப்புக்களும் தமது பூரண ஆதரவை . . . .

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.