புத் 66 இல. 51

ஜய வருடம் மார்கழி மாதம் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 27

SUNDAY DECEMBER 21 2014

 

 

ஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்திய எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் :

TNA மனோ, சாலி கடும் அதிருப்தியில்

தீர்வுத் திட்டம் குறித்தோ தமிழர், முஸ்லிம்கள் பிரச்சினை குறித்தோ ஒரு வசனமும் இல்லை என விசனம்

எதிரணிக் கூட்டணியில் இரகசியமாகவும், வெளிப்படையாகவும், இணைந்து செயற்பட்டு பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட அவர்களுடன் இணைந்து கொண்ட திகாம்பரம், இராதாகிருஸ்ணன், அஸாத் சாலி, நல்லையா குமரகுருபரன், முஜிபுர் ரஹ்மான் போன்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சந்திரிகா, ரணில், மைத்திரிபால கூட்டணி தருணம் பார்த்து முதுகில் குத்திவிட்டது என்று அரச தரப்பு அரசியல் வாதிகள் பலரும் தெரி வித்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களில் ஒரு சிறு குழுவினர் தமது பிரச்சினைகள் சிலவற்றுக்கு மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்....

விவரம்

 


காத்தான்குடியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதைக் காணலாம். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் ஜனாதிபதியுடன் காணப்படுகிறார்.
(படம்: சுதத் சில்வா)

 

தமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்திலாம்!

சம்பந்தன் இந்தியாவில்: சுரேஸ் MP அறிவிப்பாராம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் தினத்திற்கு முன்னதான இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகள் பூர்த்தியாக உள்ள எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

விவரம்» 

கட்சியையும் சமூகத்தையும் நடுத்தெருவில் விடவேண்டாம்;

மு.கா.வை அரசிலிருந்து வெளியேறுமாறு கோருவோர் சுயநல அரசியல்வாதிகள்!

கட்சியின் ஒரு சாராரை கண்டிக்கிறது மறுதரப்பு

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென தலைமைத்துவத்தை வலியுறுத்தும் எம்.பிக்கள், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் சுயநல நோக்கத்தைக் கொண்டவர்களே....

 விவரம்»

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு கெளரவம் தந்த தலைவர்:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் வெற்றிக்கு இலங்கை ஸ்ரீ ஐயப்ப குரு ஸ்வாமிகள் ஆசி

இலவச வீசா பெற வழிவகுத்தமைக்கும் ஜனாதிபதிக்கு நன்றி

ஐயப்பனின் கறுப்பு உடை அணிந்தவர்களை கரும்புலிகள் என்று கிண்டலடித்தது மட்டுமல்லாது கைது செய்யவும் காரணமாக இருந்த இருண்ட யுகத்தை இல்லாமற் செய்து இன்று நாட்டின் எந்தப் பகுதியிலும் கறுப்பு உடையுடன் ஐயப்பன் பக்தர்கள் கம்பீரமாக உலாவித் திரிய...

விவரம்»

முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் 18 திட்டங்கள்:

அமைச்சர் ரிசாத்தின் கோரிக்கைகள் ஜனாதிபதியினால் முழுமையாக ஏற்பு

விஞ்ஞாபனத்தில் ஆறு; உடன்படிக்கையில் பன்னிரெண்டு

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்கும் ஏனைய கோரிக்கைகளை அரசுடனான உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என அகில...

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.