புத் 66 இல. 47

ஜய வருடம் கார்த்திகை மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 முஹர்ரம் பிறை 29

SUNDAY NOVEMBER 23 2014

 

 

மஹிந்த ராஜபக்'வே மக்களின் தெரிவு

வெற்றிக்கு உத்வேகத்துடன் உழைக்க தமிழ், முஸ்லிம் அமைப்பாளர்கள் திடசங்கற்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த தடவையும் போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றிக்கு முன்னரை விடவும் அதிகமான உத்வேகத்து டன் பாடுபட்டு உழைக்கப்போவதாக நாடு பூராவும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்பாளர் களும் கட்சியின் தமிழ் மற்றும் முஸ்லிம் முக்கியஸ்தர்களும் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆட்சிக் காலப் பகுதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமைத்துவத்தின் கீழ் நாடு பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றியமைக்கும் அவரது எண்ணக்கரு வெற்றி பெற்று வருகிறது. ஜனாதிபதியின் இம் முயற்சியில் தமிழ் மக்களும் தங்களைப் பங்குதாரர்களாக்கி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த தேர்தலிலும் அதற்கடுத்து வரும் அனைத்துத் தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஜனாதிபதியாக்குவது எனத் தாம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் கட்சியின் பிரதான அமைப்பாளர்கள் சகலரும் தெரிவித்துள்ளனர். தமது மாவட்ட மற்றும் தொகுதிகளில் வாழும் தமிழ்,

விவரம்» 

ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்த மாபியா கும்பலின் வெளியேற்றம்

அமைச்சர்கள் நிமல், விமல், சுசில் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்குவ தற்கும் குறைந்த விலை யில் மீனை வழங்கு வதற்கும் முட்டுக்கட்டையாக இருந்த மாபியா கும்பல் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு மேலும் சக்தியையும் வலுவையும் அளிப்பதாக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். மேற்குலக சக்திகள் மேற்கொண்ட சதியின் விளைவாக அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலரின் மூலம் எதிர்க்கட்சிக்கு இந்த மோசடிக் கும்பல் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவரம்»

சாயி பகவானின் ஜனன தினம் இன்று

பஜனைகளுடன் பூஜை வழிபாடு

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 89ஆவது ஜனன தினம் இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத் தின் ஏறபாட்டில் கொழும்பு, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள சாயி நிலையத்தில் கொண்டா டப்படவுள்ளது. இன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நகர் சங்கீர்த்தன ஊர்வலத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும். காலை 9 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றம் இடம்பெறும். காலை 9.30 மணி தொடக்கம் விசேட பூஜை, பஜனை, திருவூஞ்சல் பாராயணம் என்பன நடைபெறும்.

விவரம்» 

சகல மலையக கட்சிகளும் ஜனாதிபதிக்கே ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பிரதான மலையகக் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளன. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியைச் சந்தித்து இக்கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. மலையகத்தின் பிரதான கட்சியான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், திருமதி. சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, பிரதியமைச்சர் பிரபா  . . . .

 விவரம்»

ஜனாதிபதி வேட்பாளருக்கு மதகுருமார் ஆசிகள்

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சர்வமதத் தலைவர்களான பிரம்மஸ்ரீ பாபுசர்மா குருக்கள், கலாநிதி அல் ஸெய்யித் ஹசன் மெளலானா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியபோது எடுத்த படம்.

(படம் : சுதத் சில்வா)
 

சு.க.செயலாளர்கள் கட்சி மாறுவது புதிய விடயமல்ல

மைத்திரியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி - அமைச்சர் ஜோன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் பர்னாட் அலுவிஹாரை கட்சியை விட்டு வேறு கட்சியில் இணைந்தார். ஆனால் அன்று பண்டாரநாயக்க அவர்கள் அதி கூடுதலான ஆசனங்களுடன் (56 ஆம் ஆண்டு) ஆட்சி அமைத்தார். அதனைத் தொடர்ந்து பல தடவைகள் கட்சியின் செயலாளர்கள் கட்சி தாவி உள்ளனர். அதைப்போன்றே இன்று மைத்திரிபால சிரிசேன அவர்களும் கட்சி தாவி பொது வேட்பாளராக களமிறங்கி உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இவர் ஒரு பெரிய போட்டியாளர் அல்ல என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜொன் செனவிரத்ன தெரிவித்தார்.

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.