புத் 66 இல. 46

ஜய வருடம் ஐப்பசி மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 முஹர்ரம் பிறை 22

SUNDAY NOVEMBER 16 2014

 

 

பொது வேட்பாளர் ஒருவரையே தேட முடியாதவர்களுக்கு ஆட்சி வேண்டுமாம்

எதிரணிகளின் கனவு பலிக்காது நிறைவேற்று அதிகார முறைமை

ஜனாதிபதி மஹிந்தவும் எதிர்ப்பு ஜனாதிபதியை ஆதரிக்க TNA கொள்கையளவில் தீர்மானம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் கடந்த மூன்று மாத காலமாகப் பொது வேட்பாளர் ஒருவரைத் தேடி அலையும் எதிரணியினர் நாட்டை ஆளும் ஆணையை மக்களிடம் கோரவிருப்பது பெரும் வேடிக்கையான விடயம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பொது வேட்பாளர் தொடர்பில் தமக்குள்ளே ஒரு ஒற்றுமையைக் காண முடியாத இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆளப்போகிறார்களாம். இந்த எதிரணியினரின் கனவு எதுவுமே பலிக்காது எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டாலும் இவர்களால் பொது வேட்பாளர் பிணக்கிற்கு தீர்வுகாண முடியாதிருக்கும்.இதனாலேயே இதுவரை காலமும் தமது விதண்டாவாதத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று பிரதான தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கொள்கையளவில் தீர்மானித்துள்ளன. விரைவில் இவர்களது ஆதரவு தொடர்பான அறிவித்தல் வெளியாகும் எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.

விவரம்»

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற நான்காண்டு நிறைவும் எதிர்வரும் 19ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதிக்கு தினகரன் வாரமஞ்சரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்த தினம்

நீண்ட ஆயுளுடன் வாழ மும்மணிகளின் ஆசி

முழு நாட்டு மக்களினதும் நல்லபிமானத்தையும், மும்மணிகளின் நல்லாசியையும் பெற்று நல்லாட்சி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தனது 69வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். அதேவேளை ஜனாதிபதியாக இரண்டாவது சுற்றில் ஐந்தாவது ஆண்டிலும் அவர் பிரவேசிக்கிறார். எமது நாட்டின் தலைவரான அவர் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நீண்ட ஆயுள் மற்றும் சகல விதமான செல்வங்களுடனும் வெற்றியான ஆட்சிக்கு சர்வமத தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துள்ளனர்.

விவரம்»

கலைஞர்களுடன் ஜனாதிபதி, அலரிமாளிகையில் கலந்துரை யாடினார். அங்கு கலைஞர் கலைச்செல்வன் தமிழ்க் கலைஞர் களின் தேவைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை தமிழ்க் கூட்டமைப்பு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும்

TNA பிரபா, தங்கா, கீதா, அருண் ஆலோசனை

ஜனாதிபதியை மாற்றினால் போதும் என்ற குறுகிய மனப் பாங்குடன் இனியும் செயற்படுவதை விடுத்து தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுக் கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் மற்றும் சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான கலாநிதி வேல்முருகு தங்கராசா, கிளிநொச்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி,

விவரம்» 

ஜனாதிபதித் தேர்தல்; மூன்று நாட்களில் செய்தி

எதிர்வரும் மூன்று நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று தொடர்பிலான முதலாவது செய்தியை வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவித்தல் விடுக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப் பிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 விவரம்»

நடுநிலை மனதுடன் கோரிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தீர்க்கமான முடிவு

ஜனாதிபதியை ஆதரிக்க ஆழமான பரிசீலனை; சம்பந்தனின் கூற்றுக்கு தமிழ் மக்கள் வரவேற்பு

ஆட்சி மாறுவதனால் தமிழருக்கு பலனில்லை என சுரே~{ம் சூட்சுமமாக அறிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை தாம் ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை தமிழ் மக்கள் மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் பலரும் பெரிதாக வரவேற்றுள்ளனர்.

 விவரம்»

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு நவம்பர் முதல் சம்பள உயர்வு

அமைச்சர் அதாவுல்லா அறிவிப்பு

நவம்பர் மாதம் முதல் அமுலாகும் வகையில் சகல பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள், உப தலைவர்கள், தலைவர்கள், பிரதி மேயர் மற்றும் மேயர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரி வித்தார். ணீs;ஷிuhl;rp... (தொடர்)மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர் ஐ.தே.க வழங்கிய அதே அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும் தான் வடமாகாண சபைக்கு எதிரானவனல்ல எனவும் குறிப்பிட்டார்.

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.