புத் 66 இல. 43

ஜய வருடம் ஐப்பசி மாதம் 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 முஹர்ரம் பிறை 02

SUNDAY OCTOBER 26 2014

 

 

பாராளுமன்ற வரலாற்றில் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு உரையின் போது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு,

பட்ஜட் 2015, எதிரணியினர் வரவேற்பு

அரசியலுக்காக ஒருசில எதிரான கருத்துக்களை முன்வைத்தாலும் மக்கள் நலன்சார் பட்ஜட்டுக்குப் பாராட்டு

சகல ஊடகங்களுமே வரவேற்றுப் பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்ற வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாதவாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளில் பலரும் வரவேற்று அரசாங்கத்திற்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

                                                            விவரம்»

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியை நேற்று (25) அலரி மாளிகையில் சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது. சங்கத்தின் தலைவர் பிரதியமைச்சர் பி. திகாம்பரம் தலைமையிலான சங்கத்தின் உயர்மட்ட அங்கத்தவர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். (படம்: உதேஷ் குணரட்ன)

 

 
அடுத்த ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவே

தோல்வியை தழுவும் எதிரணிக்கு வாக்களிப்பதால் பலனில்லை

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முரளிதரன் அறிவுரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காவிட்டாலும் மீண்டும் அவரே நிச்சயம் ஜனாதிபதியாக தெரிவாவார். அதனால் தோல்வியை சந்திக்கவுள்ள எதிரணியின் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எவ்விதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விவரம்»

முறியடிக்கப்பட முடியாத பட்ஜட்: சர்வ மதத் தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மக்க ளுக்கான சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் இனி எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒருபோதும் முறியடிக்க முடியாது எனுமளவிற்கு அதில் பல விசேட அம்சங்கள் பொதிந்துள்ளன. இதற்காக ஜனாதிபதியை ....

 விவரம்»

கமலேஷ் சர்மா லங்கை விஜயம்

ஜனாதிபதியை சந்தித்துரையாடுவார்

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா நேற்றுச் சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தார். இலங்கையில் தங்கியிருக்கும் ஐந்து நாட்களில் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின்....

 விவரம்»

தொலைத் தொடர்புகள் தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரபா கணேசனுக்கு தலைநகரில் வாழும் தமிழ்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பாராட்டு விழாவினை நடத்தினர். தனக்குக் கிடைத்த பல விருதுகளில் ஒன்றினை அவர் பார்த்து மகிழ்ந்தபோது எடுத்த படம். (படம்: எஸ்.சிவசண்முகநாதன்)

 

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.