புத் 66 இல. 41

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 12 2014

 

 

சகல தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு பிரதான கட்சிகள் திடசங்கற்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்'விற்கு

வலுப்பெறும் ஆதரவு

கட்சித் தலைவரா, பொதுவானவரா வேட்பாளர் எனும் முடிவிற்கே வரமுடியாத நிலையில் எதிரணி

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குத் தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்து வருகின்றன. ஜனாதிபதியின் கடந்த பத்து வருட கால ஆட்சியில் நாடு அபிவிருத்தி, பொருளாதாரம், கல்வித்துறை, வறுமை ஒழிப்பு எனச் சகல துறைகளிலும் பூரண திருப்தி கண்டு வருவதனால் இம்முறை இக்கட்சிகள் எவ்விதமான நிபந்தனையுமற்ற வகையில் தமது ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளன.

                                                            விவரம்»

 

வடக்கு அரசியல்வாதிகள் பலரின் குடும்பங்கள் வெளிநாடுகளில் சொத்து, சுகங்களுடன் சொகுசு வாழ்வு;

தமது பிள்ளைகளுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி இங்கோ மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகளுக்கு எதிர்ப்புி

பொழுது போக்கிற்காக அரசியல் நடத்துவோரை நம்ப வேண்டாம் - கிளிநொச்சியில் ஜனாதிபதி

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே எனக் கூறிக் கொண்டு தமது குறுகிய நோக்கங்களுக்காக அம்மக்களை தவறாக வழிநடத்த முயற்சித்து வரும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாடு களிலிருந்து பல வழிகளிலும் தாராளமாக பெரு மளவு நிதி கிடைக்கின்றது. அவர்களின் குடும்பங்கள் வெளிநாடுகளில் தேவையான அளவு சொத்து, சுகங்களுடன் சொகுசாக வாழ்க்கை நடத்துகின்றன. அவர்களது பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள உயர் பல்கலைக்கழகங்களில்.....

விவரம்»

வங்குரோத்து அரசியலை மறைக்க புலத்திலிருந்து பொய் இணையங்கள்

பெண்களை இழிவுபடுத்துவதாக கீதாஞ்சலி குற்றச்சாட்டு

வடக்கில் வங்குரோத்து அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் மக்களுக்கான உண்மையான சேவைகளை மேற்கொள்ளும் அரசாங்கக் கட்சி அரசியல்வாதிகள் மீதான தமது காழ்ப்புணர்வுகளை கொட்டித்...

 விவரம்»

அல்கைதாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்;

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் முன்னாள் அரசியல்வாதி

TID விசாரணை நடைபெறுகிறது - அஜித் ரோஹண

மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொ ழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந் துள்ளது.

 விவரம்»

24 இலங்கை மீனவர்கள் பங்களாதே~pல் கைது

பங்களாதேஷ் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (18) அதிகாலை அந்த நாட்டு கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கடற் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விவரம்»

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.