புத் 66 இல. 39

ஜய வருடம் புரட்டாதி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்கஃதா பிறை 25

SUNDAY SEPTEMBER 21 2014

 

 

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு:

மாவை அவசரப்பட்டுவிட்டார்

மக்களதும் கட்சி உறுப்பினர்களதும் கருத்தறியாதது தவறென சங்கரி, சுரேஷ், சித்தா குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் அஹிம்சைப் போராட்டத்திற்கான அறிவிப்பும், அரசாங்கத் திற்கான காலக்கெடு விதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக் கும் இதர கட்சிகளின் தலை வர்களைக் கடும் சீற்றத்திலும், அதி ருப்தியிலும் ஆற்றி யுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது. கூட்டணிக் கட்சி களுடன் கலந்தா லோசிக்காமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்று என அவர்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவ்விடயத்தில் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தனது எதிர்ப்பை வெளிப் படையாகவே தெரிவித்துவிட்டார்.

                                                            விவரம்»

 

செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி நலம் விசாரிப்பு

 

 தேர்தல் பிரசாரத்தின் போது வாகனத்தால் மோதுண்டு காயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் இ.தொ.கா. உபதலைவர் செந்தில் தொண்டமானை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலங்க சுமதிபால எம்.பி. ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர். (படம் நிஷாங்க டி சில்வா

 

யநலத்திற்காகவும் அரசாங்கத்தைப் பழிவாங்கும் நோக்கிலுமே குறி:

தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கூட்டமைப்பும் வட மாகாண சபையும்

சர்வ மதத் தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அக்கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் வடக்கு மாகாண சபையும் தத்தமது எல்லையை மீறி செயற்படுவதுடன் எமது தாய் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.இலங்கைக்குள் தீர்க்க....

விவரம்»

பயங்கரவாதிகள் அனைவருமே மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்

ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த

உலகிலுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே விதமானவர்களே. அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவிகளான பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர். இத்தகைய கொடிய பயங்கரவாதத்தை முழுமையாக முறியடித்ததில் வெற்றி கண்ட நாம் உலகில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான எமது அனுபவங்களை ஏனைய உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயா ராகவே இருக்கின்றோம் என ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். ஆசிய அரசியல் கட்சிகளின் 8 ஆவது சர்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தின் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

விவரம்»

அமைதியான தேர்தல்

மக்கள் சுறுசுறுப்பாக வாக்குப் பதிவு

பதுளையில் 60%, மொனராகலையில் 55%

ஊவா மாகாண சபை தேர் தலுக்கான வாக்களிப்பு நடவடிக் கைகள் எந்த விதமான பாரிய அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் வன்முறைகள் தொடர் பில் எவ்விதமான பாரிய முறைப் பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை என பெவ்ரல் அமைப்பும் தெரிவித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் 65 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 834 மத்திய நிலையங்களிலும் ஆரம்பமானது. நேற்றுச் சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

விவரம்»

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.