புத் 66 இல. 35

ஜய வருடம் ஆவணி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்கஃதா பிறை 04

SUNDAY AUGUST 31 2014

 

 

உறுதிமொழி எதனையும் பிரதமர் மோடி வழங்கவில்லை; முழுப் பூசணியை சோற்றில் மறைத்த தூதுக்குழு

பொய்யுரைத்தது TNA

தமிழ் ஊடகங்களும் தமிழ் கூட்டமைப்பிற்கு பக்கச் சார்பாக செயற்படுவதாக விசனம்

அமைச்சர் சம்பிக்க குற்றச்சாட்டு

இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக இன்றுவரை ஊடகங்களுக்குத் தெரிவித்துவரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே பொய்யானதும், கை கால் மூக்கு வைத்த கற்பனை கலந்ததுமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையாக மோடி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் மூடி மறைக்கப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார்.சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்துமே அப்பட்டமான பொய். இந்தியா, இலங்கை தொடர்பாக எதனையுமே எதிர்மறையாகக் கூறவில்லை. எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசியே அது எட்டப்பட வேண்டும் என்பதே மோடியின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது.

                                                            விவரம்»

 

விநாயகர் சதுர்த்தியையொட்டி உலகெங்குமுள்ள இந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து வழிபட்டனர். சென்னையில் மாபெரும் விநாயகர் சிலை கடலில் கரைக்கப்படுவதனை படத்தில் காணலாம்.

 

 

 

ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான முதலாவது தூதுவராக பதவியேற்ற ஷா நவாஸ் மரிக்கார் பாவா தனது நியமனக் கடி தங்களை ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயியிடம் கையளித்த பின்னர் அவருடன் கலந்துரையாடிய போது எடுத்த படம்.

 

 

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 101 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமாகிய மு. சிவலிங்கம், செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதைப் படங்களில் காணலாம்.

 

 

ஒருநாள் போட்டி; டெஸ்ட் தொடர்;

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாதனை

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடரையும் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி சாதனை புரிந்துள்ளது. பாகிஸ்தான் அணியுட னான டெஸ்ட் தொடரை இரண்டிற்குப் பூச்சியம் என்ற கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளது.

விவரம்»

தமிழகத்தில் தவமிருக்கும் கூட்டமைப்பின் தலைவர்

nஜயாவை சந்தித்த பின்பே நாடு திரும்புவாராம்

இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்ட மைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                                            விவரம்»

 

புலிகளின் பிரதிநிதிகள் தாமே எனக் கூறி தேர்தல் 2004இல் விஞ்ஞாபனம்;

புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

விரைவில் பல உண்மைகளை வெளியிட உள்ளேன் என்கிறார் சங்கரி

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர்.

                                                        விவரம்»

 

ஊவா முஸ்லிம்களின் வாக்கு ஐ.ம.சு.முவுக்கே

உறுதிபடக் கூறுகிறார் அஸ்வர் எம்.பி

நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அம்மாகாணத்தில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை வழங்குவர் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.

                                                            விவரம்»

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.